பேட்ட பிசினஸ் இப்பவே விறுவிறு: வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

Petta Distribution Rights: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் குட்டிப் புலிக்கு அடுத்தபடியாக பேட்ட படத்தை வினியோகம் செய்கிறது.

By: Updated: December 9, 2018, 04:31:46 PM

Udhayanidhi Stalin’s Red giant Movies Got Petta Distribution Rights: சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினிகாந்தை வைத்து தயாரிக்கும் படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட படம் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வேகமாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு யாரும் எதிரபாராத நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வியாபாரம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மிக அதிகமான விலைக்கு போய் உள்ளது. அதிலும் குறிப்பாக சன்பிக்சர்ஸ் தயாரித்த படத்தை தமிழகத்தின் செங்கல்பட்டு, சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை என ஐந்து ஏரியாவை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிறார்.

இதுவரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் குட்டிப் புலிக்கு அடுத்தபடியாக பேட்ட படத்தை வினியோகம் செய்கிறது. இதை உதயநிதி ஸ்டாலினே தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஏரியாக்களை லா சினிமாஸ் நிறுவனமும், தூத்துக்குடி ஏரியாவை பிரதாப் என்பவரும், கோவை ஏரியாவை கந்தசாமி ஆர்ட்ஸ் மன்னார் என்பவரும் தமிழ் சினிமா வரலாற்றில் இனி பல ஆண்டுகளுக்கு யாருமே நினைக்கமுடியா அளவிற்கு பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கோவை, ராம்நாட், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஏரியா, மற்ற‌ மாநில வினியோக உரிமை, பெரிய லாப ஏரியாவான சென்னை, ஓவர்சீஸ் என்கிற வெளிநாட்டு வியாபாரம் இவை எதுவும் இல்லாமல் பேட்ட பிசினஸ் இப்போதே 200 கோடியை நெருங்கிவிட்டதாக தயாரிப்பு நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

லேட்டஸ்டாக தயாரிப்பாளர் சங்கப் பிரமுகர் ஒருவர் உள்பட சிலரது விமர்சனப் பேச்சுக்கு பதிலடியாகவே படத்தை பொங்கலுக்கு நிச்சயம் வெளியிட்டே ஆகவேண்டும் என்று ரஜினி தரப்பில் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஷூட்டிங் தொடங்கிய படம், அஜித்தின் விஸ்வாசம்! பில்லா படம் மூலமாக இளம் ரஜினி ரசிகர்களை தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்ட அஜீத், முதல் முறையாக தனது படத்தை ரஜினி படத்துடன் களம் இறக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சீனியரான ரஜினி படம் இப்போதே பிசினஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் பிசினஸ் பற்றிய பேச்சே இல்லை. பார்க்கலாம், தல எப்படி ‘ஃபைட்’ கொடுக்கப் போகிறார் என்று?

திராவிட ஜீவா

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Udhayanidhi stalin got rajinikanths petta distribution rights

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X