இது அரசியலா? அபிமானமா? உதயநிதி மன்றத்திற்கு வாரி வழங்கிய நடிகர் சூரி
நடிகரும் திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பொது முடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இதில் நடிகர் சூரி தாமாக முன்வந்து உதவியதற்கு உயதநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதனால், நடிகர் சூரி உதயநிதி ரசிகர் மன்றம் மூலம் உதவியிருப்பது அரசியலா? அபிமானமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
udhayanidhi Stalin helps by fans club to people,lock down, actor soori helps to people joined with udhayanidhi fans, soori, உதயநிதி ஸ்டாலின், சூரி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம், திமுக, actor soori, actor udhyanidhi, dmk youth wing secretary udhyanidhi stalin
நடிகரும் திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பொது முடக்க காலத்தில் தனது ரசிகர்கள் மன்றம் மூலம் 7500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இதில் நடிகர் சூரி தாமாக முன்வந்து உதவியதற்கு உயதநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதனால், நடிகர் சூரி உதயநிதி ரசிகர் மன்றம் மூலம் உதவியிருப்பது அரசியலா? அபிமானமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், வேலைவாய்ப்பு இல்லாத அன்றாட தினக்கூலி மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு அரிசி, மாதம் ரூ.1000 உதவித்தொகை அளித்தாலும் அது போதுமானதாக இல்லை. இந்த நிலையில், அரசியல் கட்சியினர், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை பொது மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகரும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்கள் மன்றம் மூலம் 7500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் என உதவியாக வழங்கியதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில், தாமாக முன்வந்து உதவிய அண்ணன் சூரிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
என் பெயரிலான ரசிகர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 7500 குடும்பங்களுக்கு வழங்கக்கோரி அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை மன்ற செயலாளர் பாபு, து.செயலாளர் கலீம், ராஜ்குமார் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் பகிர்ந்தளித்தேன். தாமாக முன்வந்து உதவிய அண்ணன் @sooriofficial அவர்களுக்கு நன்றி pic.twitter.com/0CcNoGMnPF
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “என் பெயரிலான ரசிகர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 7500 குடும்பங்களுக்கு வழங்கக்கோரி அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை மன்ற செயலாளர் பாபு, து.செயலாளர் கலீம், ராஜ்குமார் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் பகிர்ந்தளித்தேன். தாமாக முன்வந்து உதவிய அண்ணன் சூரி அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர் மன்றம் மூலம் உதவி வழங்குகையில், நடிகர் சூரி தாமாக முன்வந்து உதவியிருப்பதை நெட்டிசன்கள் சிலர் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில், இப்படி அரசியலில் உள்ள உதயநீதி உதவும்போது, அவருடைய ரசிகர் மன்றம் மூலம் நடிகர் சூரி தாமாக சென்று அவருடன் சேர்ந்து உதவியிருப்பது அரசியலா? அபிமானமா? என்று சில நெட்டிசன்கள் சூரிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"