/tamil-ie/media/media_files/uploads/2019/01/udhayanidhi-stalin.jpg)
Udhayanidhi Stalin, Psycho movie
Udhayanidhi's Tweet : நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 24-ம் தேதி ‘சைக்கோ’ திரைப்படம் வெளியானது. இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. டைட்டிலுக்கு ஏற்றபடி, சைக்கோ கொலையாளி ஒருவன் 13 இளம்பெண்களை கொலை செய்கிறான். அவனை கண் பார்வையற்ற உதயநிதி ஸ்டாலின் கண்டுபிடித்து, அவனிடம் அகப்பட்டுக் கொண்ட அதிதி ராவை எப்படி மீட்கிறார் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் கூறியிருக்கிறார் மிஷ்கின்.
Just a whatsapp forward msg #psycho#myskkinarmy#cctv#apollo ???????? pic.twitter.com/RRqFOlhg8v
— Udhay (@Udhaystalin) January 26, 2020
இன்றைய செய்திகள் Live : திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு – உதயநிதி ஸ்டாலின்
இந்தப் படத்தை பார்த்த சிலர், கதையில் எங்குமே சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மிஷ்கின் ஆர்மியினர் என்று சொல்லப்படும் அவரது ரசிகர்கள் வாட்ஸ் ஆப்பில் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர். அதனை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற ரவி கண்ணன்; அஸ்ஸாமில் கிராம பகுதிகளில் கேன்சர் சிகிச்சை மூலமாக புகழ் பெற்றவர்!
அதில், ”சிறையில் ராம்குமார் வயரை கடித்த காலம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதால், சிசிடிவி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தான் மிஷ்கின் ஆர்மி சார்பாக நாங்கள் சொல்ல விரும்பும் பதில். முதலில் அவர்களை சிசிடிவி-யைக் காட்ட சொல்லுங்கள், பிறகு நாங்கள் காட்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.