சினிமாவில் தயாரிப்பாளர் நடிகர் என தொடங்கி தற்போது அரசியலில் தடம் பதித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதாக உதயநிதியின் மனைவி கிருத்தினா உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், ஆதவன் மன்மதன் அம்பு,7-ம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்துளளார்.
இதில ஆதவன் படத்தின் கெட்ஸ்ட் ரோலில் நடித்த உதயநிதி, இயக்குநர் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ, உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனது தாத்தா கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வரும் உதயநிதி இந்த படத்துடன் தனது திரை வாழ்க்கையை முடித்துக்கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உதயநிதி மட்டுமல்லமல் அவரின் மனைவி கிருத்திகாவும சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருகிறார். வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கிருத்திகா பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கிருத்திகா உதயநிதி, கால்பந்தாட்டத்தில் ஆர்வத்துடன் இருக்கும் இன்பநிதி, தற்போது அதிகமான திரைப்படங்களை பார்க்க தொடங்கியுள்ளார். அதிகாலை 4 மணிக்கு படம் போடுவாங்காளா என்று கேட்டு பீஸ்ட் படத்திற்கு போய்விட்டு வந்தான்.
இப்போ சமீபத்தில் என்னிடம் வந்து அம்மா நான் சினிமாவில் நடிக்கட்டுமா என்று என்று கேட்டான் அதெல்லாம் ஈஸியான வேலை இல்ல முதல்ல படிப்ப பாடிப்பெல்லாம் முடிங்க அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். உதயநிதி சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ள இதே நேரத்தில் அவரது மகனின் சினிமா என்ட்ரி குறித்து செய்திகள் வெளியாகவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil