இப்படி ஒரு வாழ்த்த தளபதியே எதிர்பார்த்திருக்க மாட்டார்! உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்

விஜய் மெர்சல் படத்தில் இருந்து தளபதி விஜய் என்ற புனைப்பெயருடன் குறிப்பிடப்படுகிறார்.

udhayanidhi stalin tweet :

அரசியலில் தளபதி என்றால் அது ஸ்டாலின். சினிமா துறையில் தளபதி என்றால் நடிகர் விஜய் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. இளைய தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டிருந்த விஜய் மெர்சல் படத்தில் இருந்து தளபதி விஜய் என்ற புனைப்பெயருடன் குறிப்பிடப்படுகிறார்.

நேற்றைய தினம், ஜூன் 22 நடிகர் விஜய் தனது 46 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். வழக்கம் போல் இல்லை என்றாலும் அவரின் பிறந்த நாளை ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவு சிறப்பாக கொண்டாடினர். காரணம், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ரத்த தான முகாம், அன்னதானம் போன்றவற்றை ரசிகர்களால் செய்ய முடியவில்லை. இருந்த போதும் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம் சமூகவலைத்தளங்களில் களைக்கட்டியது.

சினிமா பிரபலங்களும் ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஜய்-க்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்து இருந்தனர். அந்த வகையில், திரைப்பட தயாரிப்பளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணித் தலைவராகவும், இருந்து வருகிறார்.

இவர், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதியும், நடிகர் விஜய்-யும் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கமானவர்கள் என்பது சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியும்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அண்ணன் ‘தளபதி’ விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேலும், நடிகர் விஜய் தான், தான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Udhayanidhi stalin tweet thalapathy vijay birthday udhayanidhi tweet about vijay

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com