இன்பநிதி இவ்ளோ வளர்ந்துட்டாரா..! ஹாயாக தோளில் கை போட்ட உதயநிதி

udhayanidhi stalin son: மகன் இன்பநிதின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் உதயநிதி.

நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து நடிகரானார். தற்போது ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற Article15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸீ ஸ்டுடியோஸ் மற்றும் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கின்றனர். மேலும் கண்ணை நம்பாதே, ஏஞ்சல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார்.

உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் இயக்குநர் தான். இவர் வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர். இன்பநிதியின் குழந்தை பருவ புகைப்படத்தை தவிர அவரின் தற்போதைய புகைப்படம் எதுவும் சமீபத்தில் வெளிவந்ததில்லை. இந்நிலையில் தற்போது மகன் இன்பநிதின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் உதயநிதி.

இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Udhayanidhi stalin with his son inbanidhi recent pictures

Next Story
‘இந்த அப்பாவித்தனத்தை விட்டுவிடாதே சிவாங்கி’ சிம்பு அன்பில் நெகிழ்ந்த வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com