எனிமிக்கு பின்னால் இருப்பது உதயநிதியா? திடீரென கிடைத்த அதிக திரையரங்குகள்!

அண்ணாத்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்கும் உதயநிதி ஸ்டாலினை விஷால் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்கும் உதயநிதி ஸ்டாலினை விஷால் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
எனிமிக்கு பின்னால் இருப்பது உதயநிதியா? திடீரென கிடைத்த அதிக திரையரங்குகள்!

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் எனிமி. இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைக்க சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்த படத்தைத் தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால், தீபாவளி ரேசில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் வெளியாகுவதால், பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் அதற்கே முக்கியத்தவம் கொடுத்துள்ளனர். குறைந்த அளவிலான திரைப்பட விநியோகஸ்தர்களே எனிமி திரையிட ஓகே சொல்லியுள்ளனர். கடின உழைப்புடன் எடுத்த படம் குறைந்த அளவில் வெளியாகுவதால் விஷாலுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அண்ணாத்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்கும் உதயநிதி ஸ்டாலினை விஷால் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவரின் உதவியுடன் எனிமி படத்தை அதிகளவிலான தியேட்டர்களில் வெளியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின்படி, உதயநிதி உதவியால் தான் எனிமி திரைப்படம் தமிழ்நாட்டில் சுமார் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் ட்ராமா திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

Advertisment
Advertisements

இதற்கிடையில், எனிமி படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி மலை அடிவாரத்திலிருந்து அலிபிரி நடைபாதை வழியாக நடந்து வந்த விஷால், சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vishal Diwali Udhayanithi Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: