/tamil-ie/media/media_files/uploads/2023/07/umair-sandhu-and-Vijay-sethupathi.jpg)
விஜய் சேதுபதி மீது பாலியல் புகார் கூறிய பிரபலம்; தவறான தகவல் என நெட்டிசன்கள் விளாசல்
நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபலம் ஒருவர் குற்றம் சுமத்திய நிலையில், ரசிகர்கள் அது பொய்யான தகவல் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதை தேர்வாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், எந்த இமேஜூம் பார்க்காமல் வில்லன், நண்பன், குணச்சித்திரம் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடித்து முத்திரை பதித்து வருகிறார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் அவர் வில்லனாக மாஸ்டர், விக்ரம் படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படியுங்கள்: நடிகை ரேகா அவரின் பெண் செயலாளருடன் லிவ்-இன் உறவில் இருந்தாரா? மறுக்கும் பயோகிராபி ஆசிரியர்
தமிழ் சினிமா மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி கால் பதித்துள்ளார். விஜய்சேதுபதி, இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஜவான் படத்திலும் வில்லனாக பாலிவுட்டில் கலக்கியிருக்கிறார். ஜவான் படத்தில் சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நான் நடித்து இருப்பேன். ஏன் என்றால் நான் ஷாருக்கானின் தீவிர ரசிகன் என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
தற்போது விஜய் சேதுபதி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பிரபல விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து, நடிகர் விஜய்சேதுபதி மீது அபாண்டமான பழியை சுமத்தி ட்வீட் போட்டுள்ளார். அதில் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடிகை கத்ரீனா கைஃபிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார்.
Breaking news 📰: #KatrinaKaif is not happy about her upcoming film #MerryChristmas. As per Close Crew from movie, South Actor #VijaySethupathi tried sexually harassed her during movie shooting. pic.twitter.com/qqL679NwRZ
— Umair Sandhu (@UmairSandu) July 19, 2023
அந்த பதிவினைப் பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவிற்கே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும், ஆதாரமே இல்லாமல் ஒரு நல்ல மனிதர் மீது இப்படி அபாண்டமாக பழி போடுவது நியாயமா, இதெல்லாம் ஒரு பொழப்பா என்று நெட்டிசன்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.