சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் 10 நாட்கள் ஆகியும் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், உத்திரபிரதேசத்தில் முக்கிய பிரபலங்களுடன் நடிகர் ரஜினிகாந்த் படம் பார்த்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜனிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் இப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்யும் என வர்த்தக நிபுணர் மனோபாலா விஜயபாலன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ரஜினிகாந்த் தற்போது உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சிறப்பு காட்சியில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக நேற்ற செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தான் முதல்வருடன் இணைந்து படம் பார்க்க உள்ளதாகவுமு் படம் ஹிட்டானது கடவுளின் ஆசீர்வாதம் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே லக்னோவில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சிக்கு முன்னதாக ரஜினிகாந்த் இன்று அம்மாநில ராஜ்பவனில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் உத்தரபிரதேச ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே ரஜினிகாந்த் மற்றும் தனது குடும்பத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்த நிலையில், திடீரென யோகி இன்று படம் பார்க்க வரவில்லை. சொன்னபடி படம் பார்க்க வந்த உ.பி. துணை முதல்வர் கேஷப் பிரசாத் மவுரியா படம் பார்க்கும்போது வேலை காரணமாக பாதியிலேயே எழுந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“