Advertisment
Presenting Partner
Desktop GIF

வண்டி கட்டி நிற்கும் அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்!

ஏற்கெனவே ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர், தாக்கரே, என்.டி.ஆர். யாத்ரா போன்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Political Biopics of indian cinema

Political Biopics of indian cinema

2019 ஆம் ஆண்டில் வெளியிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, லட்சுமியின் என்.டி.ஆர். உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

2019 ஆம் ஆண்டு ஏற்கெனவே ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர், தாக்கரே, என்.டி.ஆர். யாத்ரா போன்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியானது. இருப்பினும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்கள் எடுப்பது முடிவடையவில்லை. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி இந்த அரசியல் தலைவர்களின் வரலாற்றுப் படங்கள் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இதில் சிலர் தன்னுடைய திரைப்படங்களை மிக வேகமாக இயக்கி முடித்திருக்கின்றனர். சிலர் வேறொரு கோணத்தில் தங்களுடைய திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சினிமா மட்டுமல்லாமல், ஒரு ஜோடி வெப் சீரியல்களையும் தயாரித்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

லட்சுமியின் என்.டி.ஆர்.

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு திரைப்பட நடிகருமான என்.டி.ராமா ராவ் வாழ்க்கை வரலாற்றை லட்சுமியின் என்.டி.ஆர். என்ற பெயரில் இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைப்படமாக இயக்கியுள்ளார்.

லட்சுமியின் என்.டி.ஆர். திரைப்படம் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் கதை என்.டி.ராமா ராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது. பி.விஜய் குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். யாக்னா ஷெட்டி லட்சுமி பார்வதி கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், என்.டி.ராமா ராவ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட என்.டி.ஆர். கதாநாயகுடு, என்.டி.ஆர். மகாநாயகுடு என்ற இரண்டு படங்கள் வெளியானது. இந்த படங்களில் நந்தமூரி பாலகிருஷ்ணா என்.டி.ஆர். வேடத்தில் நடித்திருந்தார். கிரிஷ் இயக்கிய இந்த இரண்டு படங்களும் பார்வையாளர்களையும் சினிமா விமர்சகர்களையும் கவர்ந்தது.

பிரைம் மினிஸ்டர் மோடி

பிரதமர் மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுப் படம். பி.எம். நரேந்திர மோடி பற்றிய வரலாற்றுப் படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படம் வருகிற ஏப்ரல் 5 தேதி வெளியாக உள்ளது. இதில் விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை சர்ப்ஜித் மற்றும் மேரி கோம் திரைப்படங்களை இயக்கிய ஓமங் குமார் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் போமன் இராணி, ஜரினா வஹாப், மனோஜ் ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லரில் பிரதமர் வாழ்க்கையில் இருந்து கேள்விப்படாத கதைகளை வெளிக்கொண்டுவருவது போல கூறப்படுகிறது. ஆனால், இதில் அவருடைய சொந்த வாழ்க்கை நிகழ்ச்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தலைவி

அண்மையில், நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தார். தலைவி என்ற பெயரில் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் வரவுள்ள இந்த படத்தை இயக்குநர் விஜய் இயக்க உள்ளார்.

இந்த படத்தைப் பற்றி கூறிய கங்கனா ரனாவத், “நான் என்னுடைய சொந்த வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். அந்த வேலை போய்க்கொண்டிருந்தது. ஆனால், அது ஜெயலதாவின் கதையை மிகவும் ஒத்திருந்தது. அதுமட்டுமில்லாமல், அது என்னுடைய கதையைவிட மிக பெரிய வெற்றிகரமான கதை. இந்த படத்தின் கதையை கூறும்போது, என்னுடைய வாழ்க்கைப் படத்தை ஒத்திருப்பதைக் கண்டறிந்தேன். நாங்கள் இந்த படத்தை முதலில் தமிழில் தயாரிக்கிறோம். பின்னர், இந்தியிலும் வெளியிடப்படும் இதற்காக நான் தமிழ் கற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.

தி ஐரன் லேடி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தி ஐரன் லேடி படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் வெளியிடப்பட்டது.

தி ஐரன் லேடி திரைப்பட போஸ்டரில் ஜெயலலிதாவை இந்தியாவின் மார்கரெட் தாட்சர் என்று அழைத்துள்ளனர். இந்த படத்தை எ.பிரியதர்ஷினி இயக்க உள்ளார்.

மை நேம் இஸ் ராகா

இந்தப் படத்தைப் பற்றி யூகிப்பது கடினமாக உள்ளது. இவர்களுடைய நோக்கம் ராகுல் காந்தியை கேலி செய்வது நோக்கமாக இருந்தால், அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ஏனென்றால், இந்த வகை படங்களில் இது வித்தியாசமாக காணப்படும். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு மை நேம் இஸ் ராகா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்கள் இன்னும் திரைப்படம் வெளியிடும் தேதியை அறிவிக்கவில்லை. இந்த படத்தை பால் ரூபேஷ் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அஸ்வினி குமார் நடித்துள்ளார்.

 கட்கரி

நாக்பூர் மக்களால் பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டு தயாரிக்கப்படும் படம் என்று யூடியுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் அனுராக் புசாரி பாஜக அரசியல் தலைவர் நிதின் கட்கரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் மாணவர்களின் புராஜக்ட் போல உள்ளது. இதை அவர்கள் யூடியுப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மறக்கப்பட்ட ராணுவம்

அமேசான் பிரைம் வீடியோ தொடரில், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை தொடரை வெளியிடுவதாக 2017ஆம் ஆண்டு அறிவித்தது. அந்த நேரத்தில் இயக்குனர் கபீர்கான் இந்த தொடர் 8 பாகங்களாக ஒரு சிறிய தொடராக இருக்கும் என்று அறிவித்தார். அதே போல, அவர்கள் ஷூட்டிங்கையும் தொடங்கினார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் இதுவரை அந்த தொடரிலிருந்து எதையும் வெளியிடவில்லை.

மோடி: ஒரு சாமனியனின் பயணம்

இந்த வெப் சீரீஸ் தொடரின் பத்து பாகங்கள் ஈரோஸில் கிடைக்கிறது. இப்போது இந்த தொடரை உமேஷ் சுக்லா இயக்கி வருகிறார். 102 நாட் அவுட், ஒ மை காட் ஆகிய தொடர்களின் ஒவ்வொரு பாகமும் 30 – 45 நிமிடங்கள் உள்ளன. இதில் மோடியின் பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் மகேஷ் தாக்கூர் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

Tamil Cinema Kollywood Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment