தமிழ் குடும்ப பொழுதுபோக்குத் தொடரான ’உப்பு புளி காரம்’ மே 30 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தொடரில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இடம்பெற்றுள்ளன.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில், எம் ரமேஷ் பாரதி ’உப்பு புளி காரம்’ தொடரை இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குடும்பத்தின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் ‘குடும்ப பாட்டுடன்’ இந்த தொடரின் திரையிடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தொடரானது ’கனா காணும் காலங்கள்’ மற்றும் ’ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களைப் போலவே, "வேடிக்கை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் அதிகம்" இருக்கும் என்று ஹாட் ஸ்டார் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“