/tamil-ie/media/media_files/uploads/2019/03/Zeenat-Aman-1-17.jpg)
Uriyadi2 Teaser
Uriyadi2 Teaser : தமிழ் சினிமாவில் ரிலீசான சில படங்கள் அதிகளவில் வெளியில் தெரியவில்லை என்றாலும் அது தரமான படமாக இருந்தால் அதற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கண்டிப்பாக ஒருநாள் கிடைத்து விடும். அப்படி கடந்த 2016 ஆம் ஆண்டு சத்தமே இல்லாமல் வெளியான உறியடி திரைப்படம் தமிழ் சினிமாவில் நின்று சாதிக்க சாதனைகள் ஏராளம்.
ஆரம்பத்தில் உப்புமா பட லிஸ்டில் வைக்கப்பட்ட உறியடி திரைப்படம் நாட்கள் செல்ல செல்ல என்ன படம்ப்பா இது? யாரு ஹீரோ? யாரு இயக்குனர்? என கேட்க வைத்தது. மூன்றுமே ஒருவர் தான் என தெரிந்ததும் அடடே! இதற்கு எல்லாம் ஒரு தைரியம் வேண்டும்ப்பா-ன்னு பாராட்டுக்களையும் பெற தொடங்கியது.
அதன் பலனாக உறியடி படத்தை இயக்கி நடித்திருந்த அறிமுகம் விஜய் குமார் பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது சூர்யாவின் 38 ஆவது படத்திற்கு வசனம் எழுதும் பணியையும் விஜய்குமார் தான் செய்ய உள்ளார். சூர்யாவை விஜய்குமார் பெரிதளவில் ஈர்த்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லை, சூர்யாவின் தயாரிப்பு நிறுவனுமான 2D என்டர்டைன்மெண்ட் விஜய்குமார் மீண்டும் இயக்கி நடித்துள்ள உறியடி 2 படத்தை தயாரித்துள்ளது.முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஸ்மயா, சுதாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக “உறியடி 2 ” உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கி இருந்த நிலையில், இன்று உறியடி 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இந்த டீசரை வெளியிட்டுள்ளார். டீசரை பார்த்த ரசிகர்கள் டீசர் மிரட்டலாக இருப்பதாக கூறி வருகின்றனர். உங்களின் கருத்து என்ன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.