லெஜன்ட் சரவணன் கதாநாயகிக்கு தங்கத்தில் பர்த்டே கேக்: பரிசு கொடுத்த பிரபல பாடகர்

நடிகை ஊர்வசி ரவுடேலா 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அந்த தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்.

நடிகை ஊர்வசி ரவுடேலா 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அந்த தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Urvashi Rautela cuts 24 carrot gold cake on her birthday Yo Yo Honey Singh gifts video goes viral Tamil News

யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஊர்வசி கேக் வெட்டிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Urvashi Rautela | Yo Yo Honey Singh: பாலிவுட்டில் நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. இவர் 2022ல் தமிழில் வெளியான 'தி லெஜண்ட்' படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட் திரையுலையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 

Advertisment

இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுடேலா 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அந்த தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார். 

தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து 'செகண்ட் டோஸ்' என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார். இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஊர்வசி கேக் வெட்டிய வீடியோவை பகிர்ந்துள்ளார். 

"என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா உண்மையிலேயே உலகின் மிக அழகான பெண், நான் அதை பல முறை கூறியிருக்கிறேன். அவள் மிகவும் அழகான பெண், அதனால்தான், நான் 3 கோடி மதிப்பிலான இந்த கேக்கை அவளுக்காக வாங்க முடிவு செய்தேன்" என்று யோ யோ ஹனி சிங் கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

தங்க கேக் மதிப்பு எவ்வளவு?

இந்த நிலையில், நடிகை ஊர்வசி ரவுடேலா தந்து பிறந்த நாளில் வெட்டிய 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட கேக் விலை 3 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Urvashi Rautela

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: