எனக்கு மட்டும் இல்ல, என் மகனுக்கும் எழுதுவார்; பாக்யராஜ் சொன்ன வார்த்தை; அப்படியே செய்த வாலி: என்ன பாட்டு தெரியுமா?

ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், தனது மகன் சாந்தனுவுக்கும் வாலிதான் பாடல் எழுதுவார் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோலவே, 2008-ல் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சக்கரக்கட்டி' படத்தில், ‘மருதாணி’ என்ற பாடலை வாலி எழுதி அசத்தியிருந்தார்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், தனது மகன் சாந்தனுவுக்கும் வாலிதான் பாடல் எழுதுவார் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோலவே, 2008-ல் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சக்கரக்கட்டி' படத்தில், ‘மருதாணி’ என்ற பாடலை வாலி எழுதி அசத்தியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Poet Vaali and K Bhagyaraj

எனக்கு மட்டும் இல்ல, என் மகனுக்கும் எழுதுவார்; பாக்யராஜ் சொன்ன வார்த்தை; அப்படியே செய்த வாலி: என்ன பாட்டு தெரியுமா?

1960 முதல் 2010 வரை 50 வருடங்கள் தனது பாடல் வரிகளால் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு போட்டியாக பெரிய பாடலாசிரியர் ஆனவர் இவர். இவர் எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் எழுதியது என பலரும் நினைத்தது கூட நடந்தது.

Advertisment

60-களில் கோலோச்சிய எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரும் திரை ஆளுமைகளுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். கண்ணதாசனை போலவே பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தனது படங்களுக்கு வாலியையே பாடல் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர், அரசியல் தொடர்பான பாடல்கள் அனைத்தையும் எழுதியது வாலிதான். 60களுக்கு பின் ரஜினி, கமல் தொடங்கி விஜய் – அஜித் வரை எல்லோருக்கும் பாடல்களை எழுதி இருக்கிறார். எந்த காலகட்டத்திற்கும் ஏற்றார் போல் பாடல்களை எழுதுவதில் வாலி கில்லாடி. அதோடு, அப்போது டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை தனது பாடல்களில் கொண்டு வருவார். அதனால்தான் அவருக்கு வாலிபக் கவிஞர் வாலி என பெயர் வந்தது. 

நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, ஏன், இசையமைப்பாளராக கூட அனைவரும் அறிந்தவர் பாக்யராஜ். இவர் படத்தில் பாடல்கள் எப்போதும் தனித்துவமாக இருக்கும். அந்த தனித்துவத்திற்கு பெரும்பாலும் பக்க பலமாக இருந்தவர் இளையராஜா. ஒரு கட்டத்தில் இளையராஜா உடன் மோதல் ஏற்பட, தானே இசையமைப்பாளராக மாறி, அதிலும் வெற்றி பெற்றவர் பாக்யராஜ். பாக்யராஜ் எப்படி, இயக்குனராக இருந்து பல நடிகர்களுடன், கலைஞர்களுடன் பணியாற்றியிருப்பாரோ, அதேபோல் தான், இசையமைப்பாளராக பல பாடகர்கள், பாடலாசிரியர்களிடமும் பணியாற்றி இருப்பார். அந்த வகையில், மறைந்த இளைமை கவிஞர் வாலி உடன், பாக்யராஜ் பணியாற்றிய காலங்கள், மிகவும் சுவாரஸ்யமானது என்கிறார்கள்.

பொதுவாகவே படங்களை எடுப்பதைப் போன்றே, பாடல்களையும் தேர்வு செய்துள்ளார் பாக்யராஜ். இதற்காக, கவிஞர் வாலி போன்ற பெரிய பாடலாசிரியர்கள் எல்லாம், அவரிடம் படாதபாடு பட்டுள்ளனர். ‛இனிமே இவருக்கு பாடலே’ எழுதக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்து, பலமுறை அதற்கான முயற்சியையும் எடுத்துள்ளார், வாலிப கவிஞர் வாலி. இதனை வசந்த் டிவியில் நடத்தப்பட்ட நேர்க்காணலில் கவிஞர் வாலியே கூறினார்.

Advertisment
Advertisements

1996-களில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மணி ரத்னம், ஷங்கர், பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய பாக்கியராஜ், வாலி சார் எனக்கு மட்டும் பாடல் எழுத மாட்டார், என் மகனுக்கும் தான் பாடல் எழுதுவார் என்று கூறியிருந்தார். அப்போது, அவரின் மகனுக்கு (சாந்தனு) 3 வயது மட்டுமே ஆகியிருந்தது. அதேபோல, 2008-ம் ஆண்டு சக்கரக்கட்டி படத்தில் சாந்தனு ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தில் மருதாணி என்ற பாடலை கவிஞர் வாலி எழுதி அசத்தியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்றளவும் அந்தப் பாடல் பலரது பிளேலிஸ்டில் இருக்கிறது.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: