அவரு என்னை திட்டுவார், நான் அவரை திட்டுவேன்; இதெல்லாம் எங்களுக்குள் ஜாலி: கண்ணதாசன் பற்றி வாலி சொன்ன வார்த்தை!

கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

author-image
WebDesk
New Update
kanadasan vs vaali

அவரு என்னை திட்டுவார், நான் அவரை திட்டுவேன்; இதெல்லாம் எங்களுக்குள் ஜாலி: கண்ணதாசன் பற்றி வாலி சொன்ன வார்த்தை!

கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா? வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. தமிழ் திரையுலகில் பல சோகம், தத்துவம், காதல் என பல சூழ்நிலைகளுக்கு பாடல்களை எழுதியவர் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய் - அஜித் வரை பல தலைமுறையினருக்கும்  பாடல்களை எழுதி உள்ளார். அதனால்தான் இவருக்கு வாலிப கவிஞர் வாலி என்ற பெயர் வந்தது.

Advertisment

கண்ணதாசன் பீக்கில் இருந்த போதே சினிமாவில் நுழைந்து எம்.ஜி.ஆருக்கு 63 படங்களுக்கும், சிவாஜியின் 66 படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். பல நூல்கள் மற்றும் கவிதை தொகுப்புகளையும் வாலி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் வாலிதான். கண்ணதாசனை போல ஒரு கவிஞரோ, பாடலாசிரியரோ இல்லை என்கிற நிலையில் அவருக்கு போட்டியாக பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் வாலி.

தமிழ் சினிமாவில், கவிஞர் கண்ணதாசன் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இடையேயான உறவு, நட்பு, போட்டி எனப் பல பரிமாணங்களைக் கொண்டது. எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களுக்குக் கண்ணதாசனின் வரிகள்தான் உயிர் கொடுத்தன. ஆனால், எம்.ஜி.ஆர் சில நேரங்களில் கண்ணதாசனின் பாடல்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்ததுண்டு.

"காதலிக்க நேரமில்லை, காதலிக்க யாருமில்லை": கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் வரிகள் குறித்து வாலி மேடை பேச்சுகளில் விமர்ச்சித்ததாக கூறுகிறார். காதல் உணர்வுகள் கொண்டவர்களுக்கு காதலிக்க நேரமில்லை என்று கூறுவது எப்படிச் சரியாகும்? மேலும், காதலிக்க யாருமில்லை என்பது எப்படிச் சாத்தியமாகும் என எம்.ஜி.ஆர் விவாதித்ததாக வாலி குறிப்பிட்டார். "மனைவி கர்ப்பமாக இருந்தால், வயிற்றில் காதை வைத்து கேள்": இந்தப் பாடல் வரிகளையும் வாலி விமர்சித்தார். ஒரு சராசரி மனிதன் தன் மனைவியிடம் இப்படி நடந்து கொள்வானா? என்றும், பாடலின் இந்த வரிகளில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றும் வாலி எம்.ஜி.ஆரிடம் வாலி விவாதித்ததாக கூறுகிறார். கண்ணதாசன் பலமுறை எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார். அதற்குப் பதிலடியாக எம்.ஜி.ஆரும் கண்ணதாசனை விமர்சித்துள்ளதுண்டு. ஆனால், அவையெல்லாம் ஆரோக்கியமானவை என்று குறிப்பிடுகிறார் வாலி.

Advertisment
Advertisements

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: