வாத்தி படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி டைரக்ஷனில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
Advertisment
இந்தப் படத்தின் 4ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டாராம். விஜய் சேதுபதி, தற்போது ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் கடும் குளிருக்கு இடையே லியோ படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடத்திவருகிறாராம். இங்கு ஆக்ஷன், பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
கப்ஜா படத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, ஒரு படத்தின் வெற்றிக்கு மொழி முக்கியம் இல்லை என்றார். சென்னையில் கப்ஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், “இயக்குனர் கப்ஜா கதையை சொல்லும்போது நல்லா இருந்தது. படத்தை எடுக்கும்போது கடினமாக இருந்தது. இந்தப் படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. என்னை அழகாக காண்பித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி” என்றார்.
அஜித் குமாரின் துணிவு பட நாயகி மஞ்சு வாரியர் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் பாணியில் அட்வென்ஞர் ட்ரிப் செல்ல மஞ்சு வாரியரும் தயாராகிவிட்டார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வாத்தி. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் சம்யுக்தா. இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், “நான் முதலில் ஒரு படம் நடித்தால் போதும் என நினைத்தேன். ஆனால் தற்போது சினிமா மீது காதலில் விழுந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/