வாழை திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ18.8 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய முக்கிய இயக்குநர்களின் ஒருவரான மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை இயக்கி உள்ளார். இது வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கித்தான் வீட்டுக்கு செல்கிறனர்.
இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி 9ம் நாட்களில் ரூ. 18.8 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“