Advertisment

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது: அமெரிக்காவில் 'வாழை' பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலின்

இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் 'வாழை’ படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை வாழ்த்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaazhai mk stalin

Mk Stalin appreciates Vaazhai Movie

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழைதிரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisment

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் பொன்வேல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் 'வாழைபடத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு ‘வாழை' திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, வாழை படம் பார்த்து பாராட்டிய ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் தன் X பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mari Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment