இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘ வாழை’ திரைப்பரம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் வாழைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகவாக இருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாக நடத்தப்பட்ட விழாவில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இயக்குநர்களாக உள்ள ராம், மிஷ்கின், நெல்சன், வெற்றி மாறன், அமீர் என்று அனைவரும் கலந்துகொண்டு படத்தை பற்றி பேசினர். இதில் இயக்குநர் ராம் மாரி செல்வராஜின் வளர்ச்சிக்கு அவரது மனைவி ஒரு முக்கிய காரணம் என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் தொடர்பாக தனது கருத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் பெறும் வெற்றி பெறும் என்றும் சந்தோஷ் நாயராணின் இசைப்பற்றி புகழ்ந்து எழுதி உள்ளார். மேலும் படம் நல்ல வசூலை பெற வேண்டும் என்று எழுதி உள்ளார்.