வடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்...

Vada Chennai Movie Public Review : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை பார்த்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

தனுஷ் நிறுவனமான வண்டர்பார் ஸ்டூடியோ தயாரிப்பில், வெற்றிமாறம் இயக்கியிருக்கும் வடசென்னை நிழல் உலக தாதாக்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையை சுற்றி நகரும் நிகழ்வுகளின் தொகுப்பு. இப்படத்தை பார்க்க தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

Vada Chennai Movie Public Review : வடசென்னை படம் விமர்சனம் :

வடசென்னையை பிரம்மாண்டமாக, போஸ்டர் மற்றும் கட் அவுட்களுடன் வரவேற்ற ரசிகர்கள், படத்தில் தனுஷ் வரும் காட்சி ஒவ்வொன்றிலும், தியேட்டர் ஸ்கிரீன் கிழியும் வரை கூச்சல் போட்டனர்.

மேலும், படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளமே ஸ்தம்பித்தது. கடந்த மூன்று நாட்களாகவே வடசென்னை டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. தற்போது இப்படம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், டுவிட்டர் உலகினர் அனைவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close