Vada Chennai movie release : வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வடசென்னை இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தனுஷ் ரசிகர் பட்டாளம் அனைத்தும் நேற்று முதலே கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.
Advertisment
வெற்றிமாறன் இயக்கியிருக்கும் வடசென்னை படத்தில் ஹீரோவாக நடிகர் தனுஷ் மற்றும் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். படத்தில் பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
Vada Chennai movie release LIVE UPDATES : வடசென்னை படம் ரிலீஸ் :
11:40 AM : வடசென்னை படத்தை பார்த்து திரையரங்கை விட்டு வெளியேறும் அனைவரும் படத்தை, ‘மாஸ்’, ‘கெத்து’, ‘தெறிக்க விடுது’ என்று பாராட்டி வருகின்றனர்.
11:15 AM : சென்னை வெற்றி தியேட்டரில் வடசென்னை படத்திற்காக தனுஷின் மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
Vada Chennai movie release
10:48 AM : தமிழகத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில், தனுஷ் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்டுகளுக்கு மாலை அணிவித்தும் படத்தின் கொண்டாட்டத்தை தொடங்கினர்.
10:30 AM : நடிகர் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.