வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வடசென்னை. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வடசென்னை முக்கிய அறிவிப்பு :
வட சென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, இப்படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த பல முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தனுஷ், வட சென்னை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் வெற்றிமாறனுடன் இணைந்தே பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
#Vadachennai comes with its raw, gritty, uncut intensity to the theatres from 17th October, censored ‘A’. #oct17 #anbu
— Dhanush (@dhanushkraja) 9 October 2018
மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.