/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-79.jpg)
நடிகர் தனுஷ் தனது பிறந்த நாள் ஸ்பெஷலாக தனது ரசிகர்களுக்கு வட சென்னை படத்தின் முன்னோட்டத்தை ட்ரீட்டாக வெளியிடுகிறார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வடசென்னை. பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்தில் கைகோர்த்துள்ளது.சென்னையின் முப்பது ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-78.jpg)
சில மாதங்களுக்கு வெளியான வட சென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டத்தை இன்னும் இரண்டு தினங்களில் வெளியிட உள்ளதாக தனுஷ் மற்றும் படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#vadachennai teaser ... two more days to go pic.twitter.com/FmwwLAAvJG
— Dhanush (@dhanushkraja) 25 July 2018
தனுஷின் பிறந்த நாள் வரும் 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக, ரசிகர்களுக்கு ட்ரீட் படைக்க வருகிறது வட சென்னை படத்தின் முன்னோட்டம். வட சென்னையை கதைக்களமாக வைத்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் உருவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
It is an all brass affair for the #VadaChennai teaser starring the rampaging @dhanushkraja and @VetriMaaran. pic.twitter.com/tr8JjcYEcG
— Santhosh Narayanan (@Music_Santhosh) 23 July 2018
படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வட சென்னை படத்தின் டீசரில் வரும் இசைக்காக சில வேலைகளை செய்துப் வருவதாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us