/indian-express-tamil/media/media_files/ypJxtMrBTzMJVDhhefSa.jpg)
வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரெய்லர் காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்ப டிக்கிலோனா என்ற படத்தை இயக்கியிருந்தார்.
படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படத்தில் எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, மாறன் என பெரும் நடிகர் பட்டாளமே உள்ளது.
Happy to associate with @peoplemediafcy for the Tamil Nadu theatrical distribution of #VadakkupattiRamasamy
— Red Giant Movies (@RedGiantMovies_) January 12, 2024
Gear up for the trailer, launching at 5.04pm Today #VadakkupattiRamasamyTrailer#VadakkupattiRamasamyFromFeb2#PeopleMediaFactory#RedGiantMovies#Santhanam… pic.twitter.com/PU8RiqSs4e
இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. இதில் சந்தானம், சாமி இல்லனு சொல்லிட்டு சுத்துன ராமசாமி தான நீ? எனக் கேட்கிறார்.
இந்தக் காட்சிகள் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு முற்போக்கு, பெரியாரிய ஆதரவாளரகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Team #VadakkupattiRamasamy wishing you all a very #HappyPongal
— Red Giant Movies (@RedGiantMovies_) January 15, 2024
Trailer ▶️ https://t.co/MWC7dtTtUC#VadakkupattiRamasamyFromFeb2@iamsanthanam@karthikyogitw@akash_megha@peoplemediafcy@vishwaprasadtg@vivekkuchibotla@nuttypillai@RedGiantMovies_
@negativespace04… pic.twitter.com/WHjQTluib5
இந்தக் காட்சி பெரியாரை விமர்சிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சந்தானம் சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியுள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.