/indian-express-tamil/media/media_files/2025/01/15/vgpM0kDLiDwARFhJsQMc.jpg)
வாடிவாசல் அப்டேட்
வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்' நாவலை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டே வெளியானது.
இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தி ஒரு காணொளி ஒன்றையும் படக்குழு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. வாடிவாசல் செய்தி எப்போது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து வந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு அன்றே அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே இத்திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவில்லை.
அதில் காளைகளை சூர்யா அடக்குவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அதற்குப் பிறகு படப்பிடிப்பு எதுவும் தொடங்கவில்லை அது குறித்த அப்டேட்களும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், 'வாடிவாசல்' படத்தை தயாரிக்க உள்ள கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தள பக்கத்தில், அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran@Suriya_offl#VaadiVaasalpic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
இந்த பொங்கல் திருநாளன்று அதுவும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியன்றே 'வாடிவாசல்' படம் குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.