/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-22T144523.628.jpg)
vadivelu, comedy, imsai arasan 24m pulikesi director shankar, red card, web series, வடிவேலு, நகைச்சுவை, இம்சை அரசன் 24ம் புலிகேசி, இயக்குனர் ஷங்கர், ரெட் கார்டு, வெப் சீரிஸ், வதந்தி, முற்றுப்புள்ளி
நான் எந்தவித வெப் சீரிஸ் (இணையத்தொடர்) நடிக்கவில்லை என்றும், புதிய படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று நகைச்சுவைப்புயல் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
நடிகர் வடிவேலுவின் திரைப்படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியவர்கள் என அனைவரையும் தன்நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் வடிவேலு.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. னாலும் கமலின் அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது.
வடிவேலு மறுப்பு : தான் எந்தவொரு வெப் சீரிசிலும் நடிக்கவில்லை என்றும், புதிய படம் குறித்த அறிவிப்பு, ஜனவரி மாதம் வெளியாகும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார். இதன்மூலம், வெப் சீரிசில் நடிக்கிறார் வடிவேலு என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.