சில நாட்களுக்கு முன்பு இணையம் முழுக்க ‘நேசமணியாக’ ஆட்கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு.
எப்போதுமே மீம்ஸ்களின் மூலம் இணையத்தில் வலம் வரும் அவர், நேசமணியின் மூலம் உலகளவில் ட்ரெண்டாகினார். இது குறித்து அவரிடம் கேட்க, ஊடகங்கள் முந்தியடித்தன.
அப்படியாக சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்க்காணல் ஒன்றில், ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் போது, இயக்குநருக்கு எதுவுமே தெரியவில்லை என்றும், நான் தான் நிறைய ஐடியா கொடுத்தேன் என்றும் கூறிய அவர், இயக்குநரை அவன் இவன் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு எதிராக பல இயக்குநர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இம்சை அரசன் படத்தில் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநர் நவீன், “அண்ணன் வடிவேலுவின் நேர்காணல் பார்த்தேன். இயக்குனர் சிம்புத்தேவனை, சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாதவர் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இவரை கதாநாயகனாக வைத்து வெற்றி படம் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால் தான் புலிகேசி உருவானதுபோல் ‘உடான்ஸ்’ விடுகிறார்.
அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் @chimbu_deven சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை#T1#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) 8 June 2019
உங்களுக்கு இவ்வளவு அகந்தை கூடாது. உங்களால் தான் புலிகேலி படம் வெற்றி பெற்றது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் ஓடவில்லை. சிம்புதேவனையும், இயக்குனர் ஷங்கரையும் நீங்கள் மரியாதை குறைவாக பேசுவதை ஏற்க முடியாது.
23-ம் புலிகேசி-2 படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கு இழப்பே. அதற்கு காரணமான உங்கள் அகந்தையும் ஆணவமும் கண்டிக்கத்தக்கது” என ட்விட்டரில் தனது கண்டத்தைப் பதிவு செய்திருந்தார்.
இயக்குநர் சமுத்திரக்கனி,
அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!
— P.samuthirakani (@thondankani) 11 June 2019
எனத் தெரிவித்திருந்தார்.
இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன்,
தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல!உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.#dont_forget_the_creators @chimbu_deven @NaveenFilmmaker @thondankani @directorshankar pic.twitter.com/HFANc0KS3D
— sd.vijay milton (@vijaymilton) 11 June 2019
இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் சுசீந்திரன்,
#DontForget the creators pic.twitter.com/YA0puHJ4wz
— Suseenthiran (@dir_susee) 11 June 2019
எனத் தனது கண்டத்தை தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
Let’s spread love not hatred!! #dont_forget_the_creators @shankarshanmugh @chimbu_deven @NaveenFilmmaker @thondankani @vijaymilton @dir_susee pic.twitter.com/lJERdzCzJd
— venkat prabhu (@vp_offl) 12 June 2019
இயக்குநர்கள் அனைவரும் ‘#Dont_Forget_the_Creators’ என்ற ஹேஷ் டேக்கில் வடிவேலுவுக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vadivelu imsai arasan issue directors condemn
கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?