உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணையும் வைகைப்புயல் வடிவேலு

நடிகர் கமல்ஹாசனின் லட்சியப் படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் உங்கள் நான் பாராட்டுவிழாவில் வடிவேலு பேசியதிலிருந்து இந்த தகவல் பரவலாகிவருகிறது.

vadivelu joined with Kamal haasan, actor vadivelu, actor kaml haasan, கமல்ஹாசன், தலைவன் இருக்கின்றான், வடிவேலு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், ungal naan 60, kamal haasan, Thalaivan irukkindraan movie, tamil cinema, a.r.rahman, ilayaraja, rajinikanth, indina 2
vadivelu joined with Kamal haasan, actor vadivelu, actor kaml haasan, கமல்ஹாசன், தலைவன் இருக்கின்றான், வடிவேலு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், ungal naan 60, kamal haasan, Thalaivan irukkindraan movie, tamil cinema, a.r.rahman, ilayaraja, rajinikanth, indina 2

நடிகர் கமல்ஹாசனின் லட்சியப் படமான தலைவன் இருக்கின்றான் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் உங்கள் நான் பாராட்டுவிழாவில் வடிவேலு பேசியதிலிருந்து இந்த தகவல் பரவலாகிவருகிறது.

நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்தது. கமல்ஹாசன் சினிமாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்ததை கௌரவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கமும் பிரபல விஜய் டிவியும் இணைந்து உங்கள் நான் என்ற பாராட்டு விழாவை நடத்தியது.

இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்திப் பேசினார்கள்.

கமல்ஹாசனின் உங்கள் நான் பாராட்டு விழாவில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு சுமார் பத்து நிமிடங்கள் பேசினார். அவர் சிங்கரவேலன் மற்றும் தேவர் மகன் படங்களில் நடித்தபோது கமல்ஹாசனுடனான தனது பணி அனுபவங்களைப் பற்றி பேசினார்.

நடிகர் வடிவேலு, அவர் எப்போதும் கமல்ஹாசனின் ரசிகர் என்பதை நினைவு கூர்ந்தார். “உலகநாயகன் அரசியலில் நுழைவது காலத்தின் கட்டாயமாகும்.” சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட தேவர் மாகன் செட்களில் இருந்து ஒரு சம்பவத்தை வடிவேலு குறிப்பிட்டுப் பேசினார். அது பார்வையாளர்களிடம் பலத்த கைத்தட்டலைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடிவேலுவின் பேச்சு அவர் தலைவன் இருக்கின்றான் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் படம் 2008 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்கள் நிதி சிக்கலால் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், மோகன்லால், வெங்கடேஷ் மற்றும் ரிஷி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இறுதியில், 2015 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் இந்த படத்தை இந்தியில் அமர் ஹைன் ஆக அமீர்கானுடன் பாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்த ஆண்டு ஏ.அர்.ரஹ்மான் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்தார்.

தேவர் மகனின் தொடர்ச்சியாக தலைவன் இருக்கின்றான் படம் இருக்கும் என்று பல வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை முடித்தவுடன் தலைவன் இருக்கின்றான் படத்தின் பணிகளை தொடங்குவார் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

கமல்ஹாசன் எழுதி இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் இணைகின்றனர். இருவரும் 2000 ஆம் ஆண்டு வெளியான தெனாலி படத்தில் சேர்ந்து பணிபுரிந்தனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vadivelu joined with kamal haasan in thalaivan irukkindraan movie

Next Story
விஜய்யின் தளபதி 64 படப்படிப்பு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்; படக்குழுவினர் மும்முரம்Actor Vijay, Vijay Thalapathy 64, Thalapathy 64 movie, Thalapathy 64 planning to wrap up by 2020 february, விஜய், தளபதி 64, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், director Lokesh Kanagaraj, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthnu Bhagyaraj, Antony Varghese, VJ Ramya, Lintu Rony, Gouri Kishan, Thalapathy 64 latest news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com