துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று (அக்.1) விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதற்காக மதுரை- விருதுநகர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று அவரை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் ஆனதுக்காக வாழ்த்துக்களை கூறினார்.
தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடித்த மாமன்னன் படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“