சந்திரமுகி -2 செட்… ஃபேமஸ் காமெடியை ரீகிரியேட் செய்த வடிவேலு… வீடியோ வெளியிட்ட ராதிகா!

இயக்குநர் பி.வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்க வேண்டும் என்று பல கட்ட முயற்சி மேற்கொண்டார். ஆனால் 2-ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

Actor Vadivelu darshan at Tiruchendur Murugan Temple
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு சில ஆண்டுகளுக்கு பிறகு ரீ- எண்ட்ரி கொடுத்துள்ள நிலையில், சந்திரமுக 2 படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழைய காமெடி ஒன்றை நினைவு படுத்திய அவரது வீடியோவை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இந்த படம் மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரதாழ் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் சந்திரமுகி படம் தமிழில் வசூலில சாதனை படத்தது.  

இந்த படம் வெளியானதில் இருந்து இயக்குநர் பி.வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்க வேண்டும் என்று பல கட்ட முயற்சி மேற்கொண்டார். ஆனால் 2-ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் வேறு ஹீரோவை வைத்து இயக்கும் முயற்சியில் இறங்கிய இயக்குநர் பி.வாசு தற்போது நடிகரும் இயக்குநருமான ராகவாலாரன்சை வைத்து சந்தரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார்.

சிவலிங்கா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் 2-வது படம் இதுவாகும். இந்த படத்தில் நடிகர் வடிவேலு, நடிகை ராதிகா, முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில், சமீபத்தில் பூழையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு முன்னதாக ரஜினியை சந்தித்த லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்றார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வரும் நிலையில்,  ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை ராதிகா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில், லாரன்ஸ் ராதிகா வடிவேலு மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கினறனர்.

அப்போது வடிவேலு சுறா படத்தில் இடம்பெற்ற வென்னிற ஆடை மூர்த்தியின் கச்சேரி காமெடியை ரீ-க்ரியேட் செய்யும் வகையில், காட்டிய பாவனைகளை சிரித்துக்கொண்டே நடிகை ராதிகா வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மேலும் வடிவேலு தனது என்ஸ்ட்ராடினரி நடிப்பின் மூலம் நம்மில் பலரையும் மகிழ்வித்துள்ளார். அந்த வகையில் தனது பழைய காமெடி காட்சியை தற்போது ரீ-க்ரியேட் செய்துள்ளார். இது எந்த படத்தின் காட்சி என்று கேட்டு பதிவிட்டுள்ளர்.

தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த நெட்டிசன்கள் அன்றும் இன்றும் என்றும் நகைச்சுவை நாயகன் வைகை புயல் வடிவேலு என்று பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vadivelu recreate his comedy in chandramukhi 2 shooting spot with larance radhika

Exit mobile version