ஏன் போகக்கூடாதா?: வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட மாரி செல்வராஜ்-க்கு வடிவேலு ஆதரவு

"அது அவருடைய ஊர்" என்று கூறி தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிக்காக களத்தில் செயல்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக நடிகர் வடிவேலு குரல் கொடுத்துள்ளார்.

"அது அவருடைய ஊர்" என்று கூறி தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிக்காக களத்தில் செயல்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக நடிகர் வடிவேலு குரல் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 Vadivelu Suport Mari Selvaraj flood rescue Tamil News

தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிக்காக களத்தில் செயல்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

vadivelu | Mari Selvaraj: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். இவரது தனது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அத்துடன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாரிசெல்வராஜ் நேரில் சென்று உதவி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், நெல்லையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடச் சென்றபோது, மாரி செல்வராஜும் அவருடன் சென்றார். அப்போது அமைச்சர் உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. மேலும், இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல... நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது" என்று பதிவிட்டுள்ளார்.

வடிவேலு ஆதரவு 

Advertisment
Advertisements

இந்நிலையில், தூத்துக்குடி வெள்ள மீட்பு பணிக்காக களத்தில் செயல்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக நடிகர் வடிவேலு குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள வடிவேலு, "அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு பள்ளம் எங்குள்ளது என அவருக்குத் தான் தெரியும். ஏன் போகக்கூடாதா?. அவர் ஊரில் அவரு போகம, வேற யாரு போறது? அவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு" என்று அவர் கூறியுள்ளார்.  

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Mari Selvaraj Vadivelu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: