நகைச்சுவை நடிகர் வடிவேலு மாமன்னன் படத்தில் பாடல் பாடிய அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது, “எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்டை கேட்கும் பாடலை நான் பாடுகையில் இளையராஜா ஸ்டூடியோவில் இல்லை.
அவரது உதவியாளர்கள்தான் அந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தார்கள். ஆனால் ஏ.ஆ.ரஹ்மான் அப்படியில்லை. பக்கத்தில் இருந்து கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல் ஒவ்வொரு வரியையும் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார்” எனக் கூறினார்.
தொடர்ந்து, “ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட முதலில் பயந்ததாகவும், பின்னர் உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் கட்டாயப்படுத்தி பாட வைத்ததாகவும் கூறினார்.
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பபார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் வடிவேலு திமுகவுக்கு வாக்கு கேட்ட பின்பு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு நாய் சேகர் என்ற படத்தில் நடித்தார்.
இந்தப் படம் சரியாக போகவில்லை. தற்போது சந்திரமுகி 2 மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். நடிகர் வடிவேலு பாடிய முதல்பாட்டு இளையராஜா இசையில் எட்டணா இருந்தால் என்ற பாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“