இயக்குநர் பாரதிராஜாவை எதிர்த்து பேசியதால், அவருடன் பணிபுரிந்தவர்கள் தன்னை வெட்ட வந்ததாக நடிகை வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: “ என்னோட பிறந்த நாள் ஜூலை 6, அன்றுதான் இயக்குநர் பாரதிராஜாவின் படப்பிடிக்கு சென்றேன். அங்கு இருக்கும் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்த பிறகு. மிகவும் அதிர்ச்சியான தகவலை எனக்கு தெரிவித்தார் பாரதிராஜா . விஜயகுமாருடன் நடிக்க, நடிகை தேவையில்லை. அவர் தனியாக இருந்தால்தான் அந்த கதாபாத்திரத்தின் மீது, பார்வையாளர்களுக்கு பரிதாபம் வரும் என்று கூறினார். அதை கேட்டவுடன் எனக்கு கோவம் தலைக்கு ஏறிவிட்டது. இதை நீங்கள் நான் ரயில் ஏறுவதற்கு முன்பே தெரிவித்திருக்கலாமே என்று கேட்டேன். இதை எப்போது முடிவு செய்தீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு, இரவில்தான் யோசித்ததாக அவர் கூறினார். எந்த பெண்ணின் பேச்சை கேட்டு இப்படி செய்கிறீர்கள். யாரை இந்த கதாபாத்திரத்திற்கு போடலாம் என்று முடிவு செய்துள்ளீர் என்று கேட்டேன்.
ரத்ன குமார் அவர்தான் படத்திற்கு எழுதுபவர். அவர் என் மீது கோவம் கொண்டார், அறிவாலால் வெட்ட வந்தார். மேலும் பாரதிராஜாவை இப்படி பேசியதால், அனைவரும் கோவத்தில் இருந்தனர். நான், ராதிகா, நெப்போலியன் உள்ளிட்டோர் ஒரு பல்கலைகழகத்தில் ( நடிப்பு) இருந்து வருவதாகவும், விஜயகுமார் வெளியில் இருந்து வருவதாக ஒரு எண்ணம் எனக்கு அப்போது இருந்தது. அதனால் அவர் முன்னிலையில் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்ற கோவம் எனக்கு இருந்தது. ”வேறு யாரையும் நான் இந்த கதாபாத்திரத்தில் போடவில்லை. அப்படி இருந்தால் என்னை செருப்பால் அடி. என்று அவர் செருப்பை எடுத்து அவரே அடித்துகொண்டார். உடனே டிக்கெட் போட்டுங்கள் என்று கூறினேன், ஆனால் அவர் காத்திருக்க சொன்னார். நான் கேட்கவில்லை இதெற்கு மேலே இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். உடனடியாக ரயில் பிடித்து செல்ல முடிவெடுத்தேன் எனது உறவினர், பிரேம் குமார் என்னை ரயில் ஏற்றிவிட வந்ததால், அவருக்கும் அந்த படத்தில் இடம் இல்லை. உடனடியாக எஸ்.டி.டி கால் செய்து பஞ்சு அருணாச்சலத்திற்கு பேசினேன், அவர் புறப்பட்டு வரச் சொன்னார். இந்நிலையில் அந்த கலாட்டாவுக்கு பிறகு பூஜை போட்ட படம்தான் ’வீரா’ அதில் நான் ரஜினிக்கு அம்மாவாக நடித்தேன். ஒன்று சென்றால் நிச்சயம் வேறு ஒன்று நன்றாகத்தான் வரும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டேன்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“