Vadivelu Corona Awareness Video : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் உருவாக்கிய இந்நோய், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா என படிப்படியாக மற்ற நாடுகளையும் தாக்கத் தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் இரையாகியுள்ளது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகர் திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி
தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை 27 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் இது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெறுப்பாளர்களே இல்லாத வைகைப்புயல் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “மனசு வேதனையோடு ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவுசெஞ்சு இன்னும் கொஞ்ச நாளைக்கு அரசு சொல்வதை கேட்டு எல்லாரும் வீட்ல இருங்க. மருத்துவ உலகமே உயிரை பணையம் வைச்சு எல்லாரையும் காப்பாத்திட்டு இருக்காங்க. காவல்துறை அதிகாரிகள் நம்மள பாதுகாத்துட்டு இருக்காங்க. அதனால தயவு செஞ்சு வெளியில் வராதீங்க. உங்களை கை எடுத்து கும்பிட்டு, கெஞ்சிக் கேட்டுக்குறேன். யாருக்காக இல்லாட்டியும் நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவளிகள், நம்ம புள்ளகுட்டி உயிரை காப்பாற்றுவதற்காக, நம்ம வீட்ல இருக்கணும். தயவு செஞ்சு யாரும் வெளியில் போகாதீங்க. இத அசால்டா எடுத்துக்காதீங்க. இது ரொம்ப பயங்கரமா இருக்கு. தயவு பண்ணி யாரும் வெளியில் வராதீங்க.. ப்ளீஸ்” என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை வாய் விட்டு சிரிக்க வைத்த வடிவேலு, இந்த வீடியோ மூலம் ரசிகர்களை அழவும் வைத்துள்ளார்.
கொரோனா நிவாரணம் ரூ 1000: ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அரசு கண்டிப்பான உத்தரவு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"