Vaigaipuyal Vadivelu : கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இதன் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த ஒரு மாத காலமாக முழு இந்தியாவும் லாக் டவுனில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர, மற்ற அனைத்து தேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவம், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு லாக் டவுனை அறிவிப்பதற்கு முன்பே சில நிறுவனங்களில் ஒர்க் ஃப்ரம் ஹோம் ஹோம் என்பதைக் கொடுத்திருந்தார்கள். இதற்கிடையே வீட்டிலிருக்கும் திரைப் பிரபலங்கள், இணையத்தின் வாயிலாக கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் வடிவேலு, கொரோனா குறித்த விழிப்புணர்வை சிறு சிறு வீடியோவாக ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.
மனிதநேயங்கள் ஒன்று சேரனும்
மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் ???? pic.twitter.com/nmlFqoyltr
— Actor Vadivelu (@VadiveluOffl) April 23, 2020
அந்த வீடியோவில், “இது உண்மையாவே போர் தான் நடந்துட்டு இருக்கு. எவன் பாத்த வேலையோ, கட்டடம், வீடு எல்லாம் அப்படியே இருக்கு. உயிர் மட்டும் சாகணுமாம். இதுல இருந்து தப்பிக்கணும். உலக நாடுகள் பூர, இந்த குண்டெல்லாம் புதைச்சிடனும். இனி அதெல்லாம் தேவையில்லை. மனித நேயம் வளரணும். மருத்துவ உலகம் தழைச்சிங்கி நிக்கணும். டாக்டர்களெல்லாம் கடவுள்.
இப்ப வீட்டத் தாண்டி எவனும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அது கோடு, இது வீடு. இந்த ரோட்ட தாண்டியும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ரோட்டத் தாண்டியும் வரக் கூடாது, வீட்ட தாண்டியும் வரக் கூடாது, கோட்ட தாண்டியும் வரக் கூடாது. போச்சா.. போச்சா... போச்சா... எவ்ளோ சொன்னாலும் பய புள்ளைங்க கேக்க மாட்டேங்குதுங்க. இப்ப கிடைக்குற பாடம் புள்ளைங்க காலத்துக்கும் மனசுல நிக்கும். நமக்கும் பிள்ளைங்கள வளர்க்க நல்ல சந்தர்ப்பம். வெளில போகக் கூடாதுப்பா, யாருக்கும் முத்தம் கொடுக்கக் கூடாதுப்பா, யார் முத்தம் கொடுத்தாலும் வாங்க கூடாதுப்பான்னு பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். நாளைக்கு பிள்ளைங்க, டாக்டரானாலும், நாட்டையே ஆண்டாலும் இது அவங்களுக்கு ஒரு படிப்பினை. அதனால இந்த சரியான சந்தர்ப்பத்தை, பயன்படுத்தி பிள்ளைங்கள நல்லபடியா வளர்த்துடனும்” என தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.