/tamil-ie/media/media_files/uploads/2018/02/vadivelu.jpg)
வைகைப்புயல் வடிவேலு
Vadivelu's Digital Avatar: தமிழ் சினிமாவில் தனது அசாத்திய நகைச்சுவைகளால் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. எல்லா வயதினரிடமும் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். கடந்த சில வருடங்களாக அவர் பெரிதாக நடிக்கவில்லை. நடித்த சில படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வடிவேலுவுக்கு அமையவில்லை. இருப்பினும் அவர் மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறார்.
சாதாரண விஷயம் முதல் சீரியஸான விஷயம் வரைக்குமான மீம்ஸ்களில் வடிவேலுவின் ரியாக்ஷன்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு நடந்த நடிகர் கமல் ஹாசனின் ‘உங்கள் நான்’ விழாவில், அவரின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலுவும் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கமல் ஹாசனின் உடல் நலப் பிரச்னைகள், 'இந்தியன் 2' படபிடிப்பு, மற்றும் அரசியல் பயணம் ஆகியவற்றால் அந்தப் படம் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது.
இந்நிலையில், தற்போதைய பரபரப்பு செய்தி என்னவென்றால், வைகைப்புயல் ஒரு நகைச்சுவை வலைத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ஒரு பெரிய பேனரால் தயாரிக்கப்படும் படத்திற்காக அவர் வழக்கமாக என்ன சம்பளம் வாங்குவாரோ, அதைவிட இருமடங்கு சம்பளம் இதற்காக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.