/indian-express-tamil/media/media_files/2025/08/22/screenshot-2025-08-22-181523-2025-08-22-18-15-36.jpg)
இலங்கை கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார்.அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.
பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் சதி லீலாவதி என்ற படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர். அதன்பின் வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
1950ஆம் ஆண்டில் வரலாற்றுக் காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சிறிது காலத்திலேயே தேசிய அரசியலில் இருந்து விலகிய எம்ஜிஆர், அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். 1962இல் தனது 50வது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர்.
1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார். 1969இல் அண்ணாதுரை காலமான பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றார் கருணாநிதி. திரையுலகிலும், அரசியலிலும் பங்காளிகளாக இருந்து வந்த கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு கட்டத்தில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார்.
இவர் சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி வைகோ ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.
ஒரு நாள் எம் ஜி ஆர் ஒரு படப்பிடிப்பின் நடுவில் இருந்த போது பக்கத்து ஷூட்டிங்கில் இருந்த என் டி ஆர் மூக்கில் இரத்த காயத்துடன் வந்தாராம்.
உடனே எம்ஜிஆர் என்ன ஆச்சு என்று கேட்டிருக்கிறார். அதற்க்கு அவர், "மும்பையில் இருந்து ஒரு ஃபைட்டர் வந்திருக்கிறார் அண்ணா. அவர் டேக்கில் நிஜமாகவே மூக்கில் குத்திவிட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டால், சினிமாவில் இப்படி தான் இருக்கும் என்று கூட்டுகிறார். உங்களுக்கு அவருடன் நாளை ஷூட்டிங். நீ பத்திரமா இருந்துகொள்ளுங்கள்." என்றாராம்.
எம்ஜிஆர் உடனே 3 நாட்களுக்கு லீவ் சொல்லிவிட்டு போய் வெயிட் தூக்கி பயிற்சி செய்தாராம். அதை தொடர்ந்து ஷூட்டிங் சென்ற போது அதே பைட்டர் வந்தாராம்.
இப்போது டேக்கில் எம்ஜிஆர் அவருடைய மூக்கை உடைத்து விட்டு, சினிமாவில் இப்படி தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார். அபோது தான் அந்த ஃபைட்டர் என்டிஆர் க்கு செய்தது தவறு என்று புரிந்து கொண்டாராம்.
ஆனால் அவரை எம்ஜிஆர் அப்படியே விட்டுவிடாமல், கையில் ரூ. 10,000 கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிகழ்வை பற்றியும் எம்ஜிஆர் எப்படிப்பட்ட ஆள் என்பதை பற்றியும் ஒரு மேடையில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் வைகோ அவர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.