/indian-express-tamil/media/media_files/TKRo5YcOG14OfUQayw8L.jpg)
Vairamuthu
பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, 11 வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர் இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, வெற்றிகரமான பாடலாசிரியராக திகழ்கிறார்.
தமிழ் மீது கொண்ட நேசத்தால் நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார்.
இவரது சில படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, கொங்கணி, வங்காளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக 2003-ல் சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் விருது மட்டுமல்லாமல்பத்ம, பத்மபூஷண் விருதுகள், இலக்கியத்துக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் ‘சாதனா சம்மான்’ விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி இவருக்கு ‘கவிப்பேரரசு’ என்ற பட்டம் வழங்கினார்.
சினிமா, இலக்கியத்தில் மட்டுமே இயங்கி வந்த வைமுத்து சமீப காலமாக அரசியல், நாட்டு நலன் சார்ந்த பிரச்னைகளிலும் குரல் எழுப்பி வருகிறார்.
சமீபத்தில் துபாய் நாட்டுக்கு சென்ற வைரமுத்து அங்கு ஒரு குப்பை கிடங்கின் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை தன் X பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில், ”துபாயில் இருக்கிறேன்; எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு. இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு.
துபாயில் இருக்கிறேன்
— வைரமுத்து (@Vairamuthu) June 15, 2024
எனக்குப் பின்னால்
மலைபோல் தெரிவது
மலையல்ல
பதப்படுத்தப்பட்ட
துபாயின் கழிவுகளை
ஊருக்கு வெளியே கொட்டி
மண்ணிட்டு மூடிய
குப்பைமேடு
இதில்
துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை;
சுற்றுச்சூழல் மாசு இல்லை;
நாளை மக்கிய பிறகு
தாவர எருவாகும்
சாத்தியங்கள் உண்டு… pic.twitter.com/EBX4sycTjZ
வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு இப்போது அனைத்து தரப்பினரிடையும் பாராட்டை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.