வலைப்பேச்சு விமர்சகர்கள் மீது பாய்ந்த ஓவியா ரசிகர்கள்; காரணம் என்ன?

வலைப்பேச்சு யூ டியூப் சேனல் விமர்சகர்கள் ஒவியா பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவர்களை ஓவியா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓவியாவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி களம் இறங்கியதால் இந்தவிவகாரம் மேலும் சர்ச்சையாகி உள்ளது.

By: Updated: May 19, 2020, 03:54:08 PM

வலைப்பேச்சு யூ டியூப் சேனல் விமர்சகர்கள் ஒவியா பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவர்களை ஓவியா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓவியாவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி களம் இறங்கியதால் இந்தவிவகாரம் மேலும் சர்ச்சையாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஓவியா, பிக்பாஸ் வீட்டில் தனது இயல்பால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான காலத்தில், சமூக ஊடகங்களில் ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டு அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. ஒரு நடிகைக்காக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஆர்மி உருவாக்கி செயல்பட்டது அதுவரை தமிழ்ச் சமூகம் காணாத ஒன்று.

மருத்துவக் காரணங்களுக்காக அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய, நடிகை ஓவியா, அந்த சீசன் வெற்றியாளரான ஆரவ் உடன் காதல் கொண்டதாக செய்திகள் வெளியானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகும், ஓவியாவுக்கு சில பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதே நேரத்தில் சமூக ஊடகமான இன்ஸ்டகிராமில் ஓவியா சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், கோலிவுட்டின் செய்தி தொடர்பாளர்கள் அந்தணன், பிஸ்மி, சக்திவேல் வலைப்பேச்சு என்ற யூ டியூப் சேனலில் கோலிவுட் தகவல்கள் மற்றும் சினிமா விமர்சனம் ஆகியவற்றை அளித்து வந்தனர்.


சமீபத்தில், வலைப்பேச்சு விமர்சகர்கள் அந்தணன், பிஸ்மி, சக்திவேல் தங்கள் யூடியூப் சேனலில் பேசும்போது, ஓவியா பற்றி தெரிவித்த கம்மெண்ட் சர்ச்சையானது. இவர்கள் ஓவியா பற்றி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓவிய ரசிகர்கள், ஓவியா ஆர்மி என்ற டுவிட்டர் பக்கத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரெண்ட் செய்தனர். அதோடு, வலைப்பேச்சு விமர்சகர்கள் பேசிய வீடியோவை பதிவிட்டு, கவிஞர் வைரமுத்து மீது மீ டு புகார் கூறிய பாடகி சின்மயிக்கு, டுவிட்டரில் டேக் செய்து பதிவிட்டனர். அதில், “மேடம் இந்த வீடியோவைப் பார்த்தீங்களா. அவர்கள் பெண்களின் ஆடையைப் பற்றி மட்டமாக பேசுகிறார்கள். இந்த வீடியோ மீடியாவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. பெங்களுக்கு அவர்கள் விரும்பிய ஆடை அணியும் உரிமை இருக்கிறதா? இல்லையா? இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று கேட்டிருந்தனர்.


இந்த வீடியோவுக்கு பதிலளித்த சின்மயி, “வலைப்பேச்சு யூடியூப் சேனலை சேர்ந்த இந்த 3 ஆண்களும் விஷமத்தனமான பாலியல் ரீதியான கம்மெண்ட்களுக்காக அறியப்படுகிறார்கள். அவர்களுடைய பார்வையாளர்களும் அவர்களைப் போன்றவர்கள்தான். அவர்கள் அந்த அரங்கில் விளையாடுகிறார்கள். அவர்கள் மாற மாட்டார்கள், அவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.” என்று ஓவியாவுக்கு ஆதரவாக கூறியிருந்தார்.

ஓவியாவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த, வலைப்பேச்சு விமர்சகர் அந்தணன், “எந்தவித உள்நோக்கத்துடனும் ஓவியா குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பெண்கள் குறித்து அதிலும் குறிப்பாக நடிகைகள் குறித்து அவதூறாக அல்லது ஆபாசமாக நாங்கள் கருத்து தெரிவித்ததில்லை. நகைச்சுவையாக ஒரு விஷயம் குறித்து பேசினோமே தவிர, மோசமான கருத்துகளைக் கூறி அதன் மூலம், எங்கள் சேனலுக்கு மலிவான விளம்பரம் தேடவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கூறினார்.

மேலும், “தமிழ்த் திரையுலகம் தொடர்பான புதுத் தகவல், நல்ல நிகழ்ச்சிகளை எங்கள் சேனலில் வழங்கி வருகிறோம். சினிமா குறித்து நேர்மையாக பாரபட்சமற்ற முறையில் விமர்சிக்கிறோம். அதனால்தான், எங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நேர்மையாக் செயல்படுவதால்தான், எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள். ரசிகர்களுக்கு எல்லாமே தெரியும். அதனால், ரசிகர்களை குறைவாக எடைபோட்டுவிடக் கூடாது” என்று கூறினார்.

இருப்பினும், ஓவியா ரசிகர்கள் விடுவதாக இல்லை. நடிகை ஓவியா குறித்து வலைப்பேச்சு விமர்சகர்கள் தெரிவித்த கருத்துக்கு ஓவியா ஆர்மியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து ஓவியா எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Valaipechu youtube channel men criticizing on actress oviya chinmayin reacted oviya army viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X