Advertisment

காதலர் தினம் 2024: அனுஷ்கா-விராட் முதல் ஆலியா-ரன்பீர் வரை... பிராண்ட் உருவாக்கிய பாலிவுட் பவர் ஜோடிகள்

அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி, கரீனா கபூர் கான் மற்றும் சைஃப் அலி கான் முதல் தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் வரை, ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் பவர் ஜோடிகள்

author-image
WebDesk
New Update
Valentines day Special

விராட் -அனுஷ்கா, ரன்பீர் - ஆலியா, கியாரா - சித்தார்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திரையுலகை பொறுத்தவரை திருமணம் செய்துகொண்ட நடிகைக்கு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை தான் உள்ளது. இதனால் நடிகைகள் பலரும் தங்கள் காதலையே அல்லது திருமண நிலையே சமூகத்தில் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். இதனால் அவர்களை பின்பற்றுபவர்கள் இவர் சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வார்கள்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Valentine’s Day 2024: Anushka-Virat, Alia-Ranbir to Kiara-Sidharth how the couple is a brand in themselves

திரைப்படங்களில் எப்படி காதலிக்க வேண்டும் என்பதில் நடைமுறையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி பேசியவர்கள் கூட தங்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் பாலிவுட் பவர் ஜோடிகள் தங்கள் இயல்பான நிலையில், இருந்து கவனம் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், இந்த காதலர் தினத்தில் தங்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பிராண்டை உருவாக்கிக்கொண்டிருக்கும் சில நட்சத்திர ஜோடிகளை பார்க்கலாம்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

விராட்-அனுஷ்கா முதன்முதலில் 2013 இல் ஒரு ஷாம்பு விளம்பரத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்தனர். பாலிவுட் நடிகை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரம் இருவரும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன் காதலை வளர்த்துக்கொண்டனர். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விராட்டை உற்சாகம் செய்யும் அனுஷ்கா தனது குழந்தையும் அன்பாக பார்த்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து பல பிராண்டுகளின் விளம்பர முகமாகவும் இருந்துள்ளனர்.

ரன்பீர் கபூர் – ஆலியா பட்

alia ranbir

ரன்பீர்-ஆலியா ஜோடி ரசிகர்களுக்கு ராஆலியா ஆனது. ஆலியா இளம் வயதில் திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி தற்போது தாயாகவும் மாறியுள்ளார். அவர் ஹாலிவுட் சென்று, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார், இப்போது தனது சொந்த படத்தில் நடித்து வருகிறார். ஆலியா மற்றும் ரன்பீர் பல பிராண்டு விளம்பரங்களுக்காக ஒன்றாக நடித்துள்ளனர். இவர்கள் விரைவில் சஞ்சய் லீலா பன்சாலி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

ஜெனிலியா - ரித்தேஷ்

திரையிலும் வெளியிலும் ரசிகர்களைக் கவர்ந்த மற்றொரு பவர் ஜோடி ஜெனிலியா மற்றும் ரித்தேஷ். திருமணத்திற்கு முன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய இவர்கள் இன்றும் தங்களுக்கு அங்கீகாரம் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் ஒரு முத்திரையை உருவாக்கியுள்ளனர்.

கரீனா கபூர் கான் – சையப் அலிகான்

kareena saif

கரீனா – சையப் ஜோடி ரசிகர்களுக்கு சைஃபீனா, ஸ்டைல், கவர்ச்சி மற்றும் ராயல்டி ஆகியவற்றின் சிறந்த கலவையாகும். இருவரும் சேர்ந்து வெளியே வரும்போதெல்லாம் ரசிகர்களால் கண்களை விலக்க முடியாது. நடிகர்கள் மற்றும் பிராண்ட் முகங்களுடன், அவர்கள் இரண்டு சிறுவர்களான தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் ஆகியோரின் பெற்றோர்களாகவும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

கியாரா அத்வானி – சித்தார்த் மல்கோத்ரா

கியாரா – சித்தார்த் ஜோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் ஒன்றாக பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளிப்பது,பல்வேறு  நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொள்வது போன்றவற்றை அவர்கள் அடிக்கடி பார்க்கிறார்கள், இதன்மூலம் ஒரு ஜோடியாக தங்களுக்கு ஒரு பிராண்டை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்

ரசிகர்களால் தீப்வீர்என்று அழைக்கப்படும் தீபிகா படுகோன்-ரன்வீர் சிங், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தியவர்கள். ரசிகர்கள் அவர்களை ஒன்றாகப் பார்க்க விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பிடிஏ பெரும்பாலும் கவனத்தைப் பெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Virat Kholi Anushka Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment