வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா கும்மகொண்டா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வலிமை’ படம், முதலில் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தொற்றுநோய் கட்டுப்பாடுகளால் தாமதமானது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான நிலையில், ‘வலிமை’ முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைக்கத் தொடங்கியது. அஜித்தின் வலிமை மற்றும் பவன் கல்யாணின் பீமலா நாயக் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை தியேட்டர்களில் குஷிப்படுத்தி வருகிறது.
ஆரம்பத்தில், பீமலா நாயக் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலின் அடிப்படையில் வலிமையை முந்துவது போல் தோன்றியது, இருப்பினும், அஜித் நடித்த படத்தின் வருவாய் அதன் இரண்டாவது வார முடிவில் பவன் கல்யாணின் பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை விஞ்சியது.
வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கருத்துப்படி, பீமலா நாயக்கின் உலகளாவிய வசூல் ரூ.174.12 கோடி. அஜித்தின் வலிமை படத்தின் மொத்த வசூல் 202.64 கோடி. மனோபாலாவின் கூற்றுப்படி, இதுவே அஜித்தின் அதிவேக ரூ.200 கோடி வசூல்.
வலிமை மற்றும் பீமலா நாயக் இரு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பட விமர்சகர் மனோஜ், ஒரு கட்டுரையில், அஜித்தின் வலிமை ஏன் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்கான காரணத்தை டீகோட் செய்தார்.
"மும்பையை தளமாகக் கொண்ட விநியோகஸ்தர்களிடையே உள்ள பொதுவான ஒருமித்த கருத்து என்னவென்றால், வலிமை மற்றும் ரவி தேஜாவின் கிலாடி ஆகியவை இந்தி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன, ஏனெனில் அதில் புதிய மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவே இருந்தன.
வலிமைக்கு பிரமோஷன் மற்றும் விளம்பரம் குறைவு. பத்திரிகைகளின் மதிப்புரைகள் மிகவும் ஊக்கமளிக்கவில்லை. பிற ஹிந்தி மற்றும் மராத்தி படங்களும் வெளியானது. ஹீரோ’ வடக்கில் அதிகம் அறியப்படவில்லை. இசை ஒரு குறையாக இருந்தது,'' என்று இந்திய சினிமா உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிதின் ததர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் கூறினார்.
ஆனாலும், வலிமைக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது. படம் இரு நாடுகளிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“