Valimai Full Movie Leaked to Free Download In Tamilrockers : தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்தபடம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (பிப்ரவரி 24) வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு, இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 2-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் ஹீமா குரோஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரிமினல் பின்னணி கொண்ட சட்டவிரோதமாக கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பைக்கர்களின் குழுவைக் கண்காணிக்க நியமிக்கப்படும் ஒரு காவல்துறை அதிகரியை பற்றிய கதைதான் வலிமை. இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே பல இடங்களில் 5 நாட்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால் வலிமை திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இந்த படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. வலிமை பல்வேறு திருட்டு இணையதளங்களில் கசிந்துள்ளதால், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த செய்தியை அறிந்த படக்குழுவினர் அஜித் ரசிகர்கள் என பலரும், வலிமை படத்தை தியேட்டரில் கண்டுகளியுங்கள். திருட்டு வலைதளங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து்ளளனர்.
ஒரு திரைப்படம் வெளியான உடனே அதை ஆன்லைனில் கசிய விடுவடுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதில் முன்னணி நடிகர்களின் படங்கள் விதிவிலக்கல்ல. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த, விஜயின் மாஸ்டர், சூர்யாவின் ஜெய் பீம், நவரசா, சூரரைப் போற்று சிம்புவின் மாநாடு உள்ளிட்ட பல படங்கள் திரையில் வெளியான உடனே ஆன்லைனில் கசிந்தது. இதில் சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.
திரைப்படங்கள் வெளியான உடனே ஆன்லைனில் கசிவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது, மேலும் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் பாதுகாப்பை கடுமையாக்க வேண்டிய நேரம் இது போல் தெரிகிறது. இந்நலையில், நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil