valli thirumanam serial fame nakshatra photos collection
கேரளாவில் பிறந்த நக்ஷ்த்திரா, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
Advertisment
அதில் வெண்ணிலா என்னும் கேரக்டரில் ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த தன் முத்து மாமாவையும், அவரது குழந்தையையும் நேசிக்கும் அப்பாவி பெண்ணாக நடித்தார்.
Advertisment
Advertisements
முத்து மாமாவை ஸ்வேதாவிடமிருந்து காப்பாற்ற கடவுளிடம் இவர் செய்த ஒவ்வொரு பிரார்த்தனைகளும் இதுவரை தமிழ் சீரியல் உலகம் பார்க்காதவை.
இந்த சீரியலில் ஸ்வேதாவாக வில்லியாக நடித்த’ சைத்ரா ரெட்டி, கயல் என்ற சீரியல் மூலம் சன் டிவியில் என்ட்ரி ஆனார். நக்ஷ்த்திரா, இப்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதில் அழகும், அறிவும் நிறைந்த அடாவடி கிராமத்துப் பெண்ணாக வள்ளி@பேபிமா கேரக்டரில் நக்ஷ்த்திரா நடிக்கிறார். அவளின் அம்மாவாக நளினி நடிக்கிறார். நக்ஷ்த்திரா ஜோடியாக விஜய் டிவி ஈரமான ரோஜாவே சீரியல் புகழ், ஷ்யாம் நடிக்கிறார்.
யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் இந்த இரண்டு சீரியல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அது நக்ஷ்த்திராவும், அவருடைய தோற்றமும் தான். இரண்டு சீரியலிலுமே இவர் பாவடை தாவணி, அல்லது புடவை என ஹோம்லி லுக்கில் தான் நடித்திருக்கிறார்.
ஆனால் நக்ஷ்த்திரா உண்மையில் ஒரு மாடர்ன் பெண். தனது இன்ஸ்டாவில் அடிக்கடி மாடர்ன் உடையில் எடுத்த போட்டோஷூட்களை பகிர்வதுண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“