நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று வந்தாள் ஸ்ரீதேவி சீரியல் நாயகி லஸ்யா நாகராஜ் தெரிவித்துள்ளதோடு, சூர்யா உடனான படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கலர்ஸ் தமிழ் சேனலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் வந்தாள் ஸ்ரீதேவி. இந்த சீரியலின் முன்னணி ரோலில் நடித்துக்கொண்டிருப்பவர் லஸ்யா நாகராஜ். சீரியலில், இவரது நடிப்பை பார்ப்பதற்கென்றே தனிக்கூட்டம் ஒன்று உண்டு, அந்தளவிற்கு பிரபலமானவர் லஸ்யா.
லஸ்யா, நடிகர் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அதுகுறித்து பதிவும் இட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனக்கு சினிமா பிடிக்க காரணமே, சூர்யாவின் கஜினி படம் தான். அந்த படம் எனது ஆல்டைம் பேவரைட் ஆகும். தென்னிந்திய சினிமாவின் சிறந்த படம் கஜினி.
சூர்யாவின் அடுத்த படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் நானும் இருக்கேன் என்பதை தன்னால் இதுவரை நம்பமுடியவில்லை. என்னுடைய கனவு நனவாகிவிட்டதாக உணர்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த லஸ்யா : 2017ம் ஆண்டில் கன்னட மொழி ரியாலிட்டி ஷோவான டான்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரையில் லஸ்யா அறிமுகமானார். பின் பத்மாவதியில் நடித்திருந்தார். தமிழ் ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம். தமிழில் அறிமுகமானார். தற்போது வந்தாள் ஸ்ரீதேவி சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் லஸ்யா, சில படங்களிலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.