பரத்துக்கு ஜோடியாகும் ’தெய்வமகள்’ வாணி போஜன்!

Vani Bhojan: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றிலும் வாணி நடித்து வருகிறார்.

Vani Bhojan: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றிலும் வாணி நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vani Bhojan, oh my kadavule mobile number

Vani Bhojan

Serial Actress Vani Bhojan: முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. இன்னும் சிலரோ தொலைக்காட்சி தொகுப்பாளர், பின்னர் சீரியல், அதன் பிறகு சினிமா எனத் தங்களது கரியரை திட்டம் தீட்டிக் கொள்கிறார்கள்.

Advertisment

இதற்கு உதாரணமாக பிரியா பவானி சங்கரை சொல்லலாம். செய்தி வாசிப்பாளராக தன் கரியரை தொடங்கி, ”கல்யாணம் முதல் காதல் வரை” என்ற சீரியலில் நடித்து, அதன் மூலம் சினிமாவில் நுழைந்து, தற்போது படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

பிரியாவை தொடர்ந்து ரசிகர்களிடன் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை வாணி போஜன். சன் டி.வி யில் ஒளிபரப்பான ”தெய்வமகள்” சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர். தற்போது நடிகர் வைபவ் உடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். அதோடு அவ்வாபோது தனது படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும், வழக்கமாக வைத்திருக்கிறார் வாணி.

Advertisment
Advertisements

தவிர, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றிலும் வாணி நடித்து வருகிறார். இதற்கிடையே தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க இருக்கிறார் வாணி போஜன். ரொமாண்டிக் காமெடி களத்தில் இயக்கப்படும் இந்த வெப் சிரீஸில், நடிகர் பரத்தும் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: