Advertisment

விஜய்க்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்... எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு... நடிகை வாணி போஜன்

நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் தனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vani bhojan

நடிகை வாணி போஜன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் தனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருப்பதாக நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.

Advertisment

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது அரசியல் கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அறிவித்தார். தனது கட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று தெரிவித்தார்.

தற்போடு நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலுக்கு வர இருப்பதாகவும், அதன் பிறகு, படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் முழுமையாக மக்கள் சேவையாற்றப் போவதாக நடிகர் விஜய் அறிவித்தார்.

இதனால், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகை வாணி போஜன், நடிகர் விஜய் அரசியல் வருகையைப் பற்றி கருத்து தெரிவித்தார்.

நகைக்கடை திறப்பு விழாவுக்குப் பின், நடிகை வாணி போஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உங்களுக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிக வாணி போஜன், “அரசியலுக்கு நாம் தான் வர வேண்டும், அவர்கள்தான் வர வேண்டும் என்று கிடையாது. யார் நல்லது பண்ண வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே அரசியலுக்கு வரலாம்.  ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை நாங்கள் 'செங்களம்' என்ற பெயரில் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்த போது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்பொழுதும் அந்த ஆசை இருக்கிறது. இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால், கூடிய விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து தெரியவில்லை” என்று கூறினார்.

விஜய், விஷால் அரசியலுக்குள் வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த நடிகை வாணி போஜன், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால் நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரியவரும்” என்று கூறினார். 

நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் தனக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது என்றும் நடிகை வாணி போஜன் கூறியிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vani Bhojan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment