scorecardresearch

‘சரஸ்வதியிடம் சென்று சேர்ந்திருப்பார்’: வாணி ஜெயராம் உடலுக்கு பிரபலங்கள் மரியாதை

பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘சரஸ்வதியிடம் சென்று சேர்ந்திருப்பார்’: வாணி ஜெயராம் உடலுக்கு பிரபலங்கள் மரியாதை

பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல தமிழ் பாடல்கள் பாடியுள்ளார். தெலுங்கு, கன்னடம், மராத்தி என்று பல்வேறு மொழிகளில் 10,000 மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளர். கடந்த வாரம் இவரது கலை சேவையை பாராட்டி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருதை பெறாமலேயே அவர் மரணமடைந்தார்.

வாணி ஜெயராமின் மரணம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவில் அவரது உடல் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமார், தமிழக ஆளுநர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வை.ஜி மகேந்திரன் பேசியதாவது : “ ஒரு அற்புதமான கலைஞரை  இந்தியாவே இழந்திருக்கிறது. கலைவாணி என்ற பெயர் இவர்களுக்குத்தான் பொறுந்தும். மிகவும் வருத்தமாக இருக்கிறது. பத்ம பூஷன் விருது கிடைத்தது தொடர்பாக அவரிடம் மூன்று நாட்களுக்கு முன்புதான் பேசினேன். அவரை  சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இரங்கல் செய்தியை பகிர்ந்துகொள்வேன் என்று நினைக்கவில்லை. சரஸ்வதியின் காலில் சென்று சேருவார்கள். ” என்று அவர் கூறினார்.

இளையராஜா கூறியதாவது “ இந்திய இசை உலகில் 10,000 பாடலை பாடி தனக்கென தனியான இடத்தை பெற்ற வாணி ஜெயராமின் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். எனக்கு நிறைய பாடல்கள் பாடியிக்கிறார். அவருடைய குரலும் பாடுகின்ற பாணியும் பாடலை மேலும் அழகுப்படுத்தியிருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உடல் சாந்தி அடைய வேண்டும்.” என்று அவர் கூறினார்.   

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vani jayaram death condolence cinema industry