என்‌ முதலாளிக்கும் எனக்கு டீல்; வாடகைக்கு தான் ஜோவிகாவை அனுப்பினேன்; பிக்பாஸ் பற்றி பேசிய வனிதா!

ஜோவிகா பிக்பாஸில் கலந்து கொண்டு ஜெயிக்காவிட்டாலும் அந்த வீட்டில் 70 பிளஸ் நாட்கள் இருந்ததற்கான ஊதியமாக 12 -15 லட்சம் வரை அவருக்கு கிடைத்தது. அதை வைத்து படத்தை தயாரித்தார். இந்த படத்தை வனிதா இயக்கியும் நடித்துள்ளார்.

ஜோவிகா பிக்பாஸில் கலந்து கொண்டு ஜெயிக்காவிட்டாலும் அந்த வீட்டில் 70 பிளஸ் நாட்கள் இருந்ததற்கான ஊதியமாக 12 -15 லட்சம் வரை அவருக்கு கிடைத்தது. அதை வைத்து படத்தை தயாரித்தார். இந்த படத்தை வனிதா இயக்கியும் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-02 155837

விஜயகுமார்- மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆண் குழந்தை ஸ்ரீஹரி, வனிதாவின் முதல் கணவர் ஆகாஷுடன் வளர்ந்து வருகிறார். அது போல் மகள்கள் ஜோவிகா, ஜெயினிகா ஆகியோர் வனிதாவுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisment

இதில் ஜோவிகாவும் ஸ்ரீஹரியும் ஆகாஷுக்கும், ஜெயினிகா ஆந்திரா தொழிலதிபதி ஆனந்தராஜுக்கும் பிறந்தவர்கள். தற்போது வனிதா இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியே வசித்து வருகிறார். வனிதா குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த காலத்தில் ஒரு ஆண் துணை இல்லாமல் இரு குழந்தைகளை வளர்ப்பது என்பது பெரிய விஷயம். எதையும் தைரியமாக சந்திக்கும் திறன் இவருக்கு உண்டு.

இவர் நடிகை, இவரது குடும்ப பெரிய பணக்கார குடும்பம் என்ற போதிலும் வனிதா, பிக்பாஸுக்கு வந்த போது பெரிய அளவில் இல்லை. எப்போது பிக்பாஸுக்கு வந்தாரோ அதன் பிறகு குக் வித் கோமாளி, பிறகு ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் வாய்ப்பு என கிடைத்தது. மேலும் சில சினிமாக்களையும் அவர் இயக்கியிருந்தார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் தமிழகத்தில் லைம்லைட்டிற்கு வந்தார். அவருடைய மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் சாதிக்க விரும்பினார்.

இவரும் பிக்பாஸில் கலந்து கொண்டு ஜெயிக்காவிட்டாலும் அந்த வீட்டில் 70 பிளஸ் நாட்கள் இருந்ததற்கான ஊதியமாக 12 -15 லட்சம் வரை அவருக்கு கிடைத்தது. அதை வைத்து "மிஸ்ஸஸ் அன்ட் மிஸ்டர்" எனும் படத்தை தயாரித்தார். இந்த படத்தை வனிதா இயக்கியும் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் ஒரு நேர்காணலின் போது ஜோவிகா பிக் பாஸ் சென்றதை பற்றி அவர் பேசியுள்ளார். "நான் அவளை வாடகைக்கு அனுப்பிய மாதிரி தான் அனுப்பினேன். முழுவதுமாக என் பேச்சை மட்டுமே கேட்டு சென்ற குழந்தை தான் ஜோவிகா. அங்கே சென்று வீடு வேலை செஞ்சிட்டு வா என்று தான் கூறி அனுப்பினேன். அங்கு கிடைத்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது தான் இந்த படம் பற்றி தோன்றியது. அப்படி உருவானது தான் இந்த படம்." என்று மிஸ்ஸ்ஸ் அண்ட் மிஸ்டர் படத்தை பற்றி கூறினார் வனிதா. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: