பெயருக்கு பின்னால் விஜயகுமார் என சேர்ப்பது அப்பாவுக்கு வலிக்க தான்; வனிதா பகீர் பேட்டி

தப்பு, தப்பா அட்வைஸ் கொடுத்து, என் வாழ்க்கையை காலி பண்ணது அப்பா தான்; வனிதா விஜயகுமார் ஷாக் பேட்டி

தப்பு, தப்பா அட்வைஸ் கொடுத்து, என் வாழ்க்கையை காலி பண்ணது அப்பா தான்; வனிதா விஜயகுமார் ஷாக் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijaykumar, actress Vanitha Vijaykumar, Vanitha Vijaykumar says about importants of right size bra, சரியான சைஸ் ப்ரா ரொம்ப முக்கியம், தவறான ப்ரா சைஸால் இவ்ளோ பிரச்னை இருக்கு, வனிதா விஜயகுமார், Vanitha, vanitha says importants of right size bra, vanitha says problem of wrong size bras uses

வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா, தன்னுடைய தந்தை விஜயகுமார் தனக்கு தப்பு தப்பா அட்வைஸ் கொடுத்ததாகவும் அதனால் தான் தன்னுடைய வாழ்க்கையே சீரழிந்ததாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, அவரது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் பேசாமல் பிரிந்து வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வனிதா தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் சினிமாவிலும் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவரது மகள் ஜோவிகாவும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: கவிஞர் வாலிக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்: காரணம் கண்ணதாசன்?

இதனிடையே யூடியூப் சேனலுக்காக நடிகை ரேகா நாயர், பேட்டி எடுக்கும்போது வனிதா தனது தந்தை மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்தப் பேட்டியில் வனிதா கூறியதாவது, நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கான காரணமும் என்னுடைய அப்பாதான். என் அப்பா ஒரு பேட்டியில பேசுனதை பார்த்தேன். அதில் அவர், என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சை கேட்பாங்கனு சொல்லி கவிதா, அனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி, அருண் விஜய்னு எல்லாரையும் குறிப்பிட்டார். அவரின் லிஸ்டில் என்னுடைய பெயர் இல்லை. என்னுடைய பெயரை எதிலும் குறிப்பிடுவதில்லை.

Advertisment
Advertisements

சமீபத்தில் ஒரு நபர் எனக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்தார். அந்த வீடியோவை நான் 10, 15 தடவை பார்த்தேன். அதில் அப்பா பிள்ளைகளை பற்றி பேசி இருப்பார். ஆனால் என்னை பற்றி அதில் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இது எனக்கு கோபத்தை கொடுத்தது. அதனால் நான் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால் அவர் சொன்ன விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்ததெல்லாம் உண்மைதான். தப்பான அட்வைஸ் கொடுத்தா நான் கேட்கணும்னு அவசியம் இல்லை. அவர் வனிதா மட்டும் தான் என் பேச்சை கேட்கலனு சொல்லிருந்தா நானே கைதட்டி இருப்பேன். நான் ஒருத்தி இல்லாத மாதிரி அவர் பேசின அந்த பேட்டியை 10 முறை திரும்ப திரும்ப பார்த்தேன்.

இதில் எனக்கு கடுப்பான விஷயம் என்னவென்றால், நான் மட்டும் தான் அவர் பேச்சை உண்மையா கேட்டேன், அதுனால தான் என் வாழ்க்கை காலியாச்சு. என் அப்பா கூட இவ்வளவு சண்டை வந்து அவரது பெயரை ஏன் நீங்க விடுவதில்லைனு பல பேர் கேட்டாங்க. அதற்கு காரணம், அந்த விஜயகுமார்னு போட்டா தான் அவருக்கு அங்க வலிக்கும். அதனால் அவர் பெயரை மாற்ற மாட்டேன்.

நீங்க சொல்லலாம் நான் உங்க குடும்பத்துல இல்லைனு, ஆனா உலகத்தை பொறுத்தவரை நான் உங்க பொண்ணு தான். அவரை ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன். பல நாள் அவருக்காக அழுதிருக்கேன். ஒரு நாள் என் பொண்ணு ஜோவிகா என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள், இல்லாத ஒருத்தரை பற்றி இன்னும் எவ்ளோ நாள் கவலைப்பட்டுகிட்டே இருக்கபோறிங்க, இருக்குற எங்கள பத்தி யோசிங்கனு சொன்னா, அன்னைக்கு தான் இதையெல்லாம் தூக்கி போட்டேன். இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamil Cinema Vanitha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: