Advertisment

ஜோவிகாவை தேடி வந்த ஹீரோயின் சான்ஸ்; 2 படங்கள் ரெடி: ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றுள்ள தனது மகள் ஜோவிகாவின் பேச்சுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை வனிதா, அவர் குறித்து பல சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vanitha opens secrets about her daughter Jovika vijaykumar in tamil

'ஜோவிகா பிக்பாஸ் செல்லும் முன்னரே 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட் ஆகிவிட்டார். ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படத்தில் ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்' என்று வனிதா கூறியுள்ளார்.

Vanitha-vijayakumar | bigg-boss-tamil: விஜய் டி.வி-யின் பிக்பாஸ் 7வது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நடப்பு சீசனில் சினிமா பிரபலங்கள், டிஜிட்டல் முகங்கள் என 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ட்விஸ்ட் மற்றும் ரூல்ஸ்களுடனும் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

Advertisment

இந்நிலையில், நிகழச்சியில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். 'அடிப்படை கல்வி அவசியம்' என மற்றொரு போட்டியாளரான நடிகை விசித்ரா கூறியதற்கு ஜோவிகா எதிர்ப்பு தெரிவிதார். தனக்கு படிப்பு வராததால் தான் பிடித்ததை செய்வதாக கூறி வாக்குவாதம் செய்தார். 

ஜோவிகாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமச்சித்து வருகிறார்கள். ஜோவிகா பேசியது தொடர்பாக பரபரப்பான விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், நடிகை வனிதா தனது மகளின் பேச்சுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ஜோவிகா குறித்து பல சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். 

யூடியூப் சேனலுக்கு வனிதா அளித்த பேட்டியில், கமல்ஹாசன் முதல் எபிசோடில் ஜோவிகாவை டெக்னீஷியன் என கூறியதை சுட்டிக்காட்டினார். அப்போது ஜோவிகா இயக்குனர் பார்த்திபனிடம் கடந்த சில மாதங்களாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்ததாகவும் வனிதா கூறினார்.

தன்னிடம் இரண்டு கார்கள் இருந்தாலும், ஜோவிகாவை மெட்ரோ ரயிலில் தான் பார்த்திபன் அலுவலகத்துக்கு அனுப்புவேன் என்றும், அப்படி போனால் தான் அவளுக்கு உதவி இயக்குனர்களின் கஷ்டம் என்ன என்பது புரியும் என்றும், தானும் இயக்குநர் பி. வாசுவிடம் 10 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதாகவும் கூறினார். 

இவற்றுடன் ஜோவிகா குறித்த முக்கிய ரகசியத்தையும் அந்த பேட்டியில் உடைத்திருந்தார் வனிதா விஜயகுமார். அதில், ஜோவிகா பிக்பாஸ் செல்லும் முன்னரே 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட் ஆகிவிட்டார். ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படத்தில் ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார். அதன் பின்னரே அவர் பிக்பாஸுக்கு சென்றுள்ளதாகவும், ஜோவிகா இதை பிக்பாஸ் வீட்டில் சொல்லாவிட்டாலும் தான் சொல்வதில் பெருமை கொள்வதாகவும் வனிதா கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bigg Boss Tamil Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment